• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாறுகண்களும் திகில் சிரிப்பும் கொண்ட குமரி முத்துவுக்கு இப்படி ஒரு ஸ்பெஷலா…?

சினிமா

90களில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் குமரிமுத்து. அவரது நீண்ட அந்த பயங்கர சிரிப்பு எந்த நகைச்சுவை நடிகருக்கும் வராது. குமரிமுத்துவைப் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. பார்க்கலாமா…

தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர். திரையில் இவர் வந்து டயலாக் எதுவும் பேசாமல் சிரித்தாலே போதும். நமக்கும் பொத்துக் கொண்டு சிரிப்பு வந்து விடும். அந்த வகையில் இவருக்கு மட்டுமே உரிய ஸ்டைல் தான் இது. சொந்த ஊர் கன்னியாகுமரி. தனது 14வது வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டாராம். மேடை நாடகங்களில் நடித்து திரையுலகில் கால் பதித்துள்ளார்.

இவரது மாறுகண்ணும், தனித்துவமான சிரிப்பும் தான் இவரது அடையாளங்கள். தனது மாறுகண்ணையே பிளஸ் பாயிண்டாக்கிக் கொண்டார் குமரிமுத்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்சினிமாவில் நடித்து வந்தார்.

இவர் நடிகர் மட்டுமல்ல. சிறந்த பேச்சாளரும் கூட.. 2016ல் காலமானார். இவரது கல்லறையில் எழுதப்பட்ட வாசகங்கள் கவனிக்கத்தக்கவை. அதில் “It is the time for the God …to enjoy his laughter” இது ஆண்டவருக்கான நேரம். இதுவரை அவர் எங்களைத் தேவையான அளவு சிரிக்க வைத்துவிட்டார்… என்பதே இதன் அர்த்தமாம்.

அப்படிப்பட்ட அந்த வாசகம் இணையத்திலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கத்திற்கு எதிராகப் பேசியதாக இவர் மீது நிறைய விமர்சனங்கள் விழுந்தன. அதன்பிறகு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.

குமரிமுத்து முதலில் நடித்த படம் உதிரிப்பூக்கள். தொடர்ந்து காளி, ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோழி கூவுது, மெட்டி, நானே ராஜா நானே மந்திரி, அறுவடை நாள், மனைவி ரெடி, ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பொண்டாட்டி தேவை உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை நிலைநாட்டியுள்ளார் இந்த நகைச்சுவை ஜாம்பவான் குமரிமுத்து.

தேன்மொழி

Leave a Reply