• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படம்!.. டிராப் ஆனதுக்கு காரணம் இதுதான்!..

சினிமா

தமிழ் திரையுலகில் பாரம்பரிய நிறுவனமாக இருப்பது ஏவிஎம். 1935ம் வருடம் முதல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா என்றாலே அப்போது எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இந்த நிறுவனம்தான். வடிவேலு கூட ஒரு காமெடி காட்சியில் ‘சினிமாவை கண்டுபிடித்தது யாரு?’ என்கிற கேள்விக்கு ‘ஏவி மெய்யப்ப செட்டியார்’ என சொல்வார்.

பல நடிகர், நடிகைகளை, இயக்குனர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த நிறுவனம். 1935லிருந்து பல வருடங்கள் அந்நிறுவனத்தின் பணிகளை பார்த்தவர் ஏவி மெய்யப்ப செட்டியார்தான். அவருக்கு பின் அவரின் மகன்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், குமரன் ஆகியோர் பார்த்துகொண்டனர்.

சினிமாவை மிகவும் கச்சிதமாக கணக்குப்போட்டு எடுப்பார்கள். இன்றைய படப்பிடிப்புக்கு இவ்வளவுதான் பட்ஜெட் என்றால் அதை மட்டுமே கொடுப்பார்கள். சொன்ன தேதிக்கு படத்தை வெளியிடுவார்கள். இந்த நிறுவனத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினி போன்ற நடிகர்களுக்கே இருந்த காலம் அது.

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி, கமலை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்தவர் இவர். ஒருமுறை படப்பிடிப்பை முடித்துவிட்டு அவரும், ரஜினியின் ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்தபோது அங்கே ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

எனவே செட்டியாரை பார்த்துவிட்டு செல்வோம் என சொல்லி எஸ்.பி.முத்துராமன் ரஜினியை அழைத்துகொண்டு அவரிடம் சென்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மெய்யப்ப செட்டியார் ‘நீங்கள் ரஜினி, கமல் என இருவரையும் வைத்து வெற்றிப்படங்களை இயக்கி வருகிறீர்கள். நமது தயாரிப்பில் நீங்கள் ஏன் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்கக் கூடாது?..

இயக்குனர் ஸ்ரீதர் எழுதிய ரத்த பாசம் என்கிற கதையை ஏற்கனவே ஹிந்தியில் நாம் எடுத்து அது வெற்றி பெற்றது. அதையே தமிழில் எடுக்கலாம்’ என சொல்ல முத்துராமனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகாமல் போனது. அதற்கு காரணம் ஏவி மெய்யப்ப செட்டியாரின் திடீர் மறைவுதான்
 

Leave a Reply