• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

சினிமா

1957ல் பானுமதி நடித்த படங்கள் 4. அவை அனைத்திலும் நடிகர் திலகம் சிவாஜி தான் நடித்திருந்தார். பிப்ரவரி 27ல் மக்களைப் பெற்ற மகராசி படம் வெளியானது. இதுதான் தமிழ்சினிமாவின் முதல் வட்டார மொழி படம். கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தனர். போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடலை டிஎம்எஸ்.சுடன் பானுமதி இணைந்து பாடி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை படத்தைத் தொடங்கினார். இது காமெடி படம். அவரை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு அசோகனை விலக்கி விட்டு ஹீரோவாக சிவாஜியை நடிக்க வைத்தார். சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் படத்தில் நடித்தனர். சிவாஜியுடன் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக பானுமதிக்கு இருந்தது. சொக்கா போட்ட நவாபு, வாங்க மச்சான் வாங்க என பல சூப்பர்ஹிட் குத்துப்பாடல்கள் இந்தப் படத்தில் இருந்தது.

ஆரூர்தாஸின் ஆசான் தயாரிப்பு ராணி லலிதாங்கி. பிரபல நடிகர் ஒருவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து ஆண்டவனே இல்லையே தில்லைத்தாண்டவனே உன்போல் ஆண்டவனே இல்லையே என பாடி நடிக்க வேண்டும் என மூடநம்பிக்கைக் கருத்துக்கள் வருகின்றன.

திமுக கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன் என்று அந்த பிரபல நடிகர் விலகி விட்டார். ஆனால் அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் தஞ்சை ராமையா தாஸ். இவர் ஜெயிக்க ஒத்துழைத்தவர் யார் தெரியுமா? பானுமதி தான். லலிதாங்கியாக நடித்தவர் பானுமதி. இவரைத் தவிர வேறு யாரும் நடித்து இருந்தால் அந்த பிரபல நடிகருக்குப் பயந்து நடிக்காமல் போயிருப்பார்களாம்.

பானுமதியும், நடிகர் திலகமும் நடித்த படம் அம்பிகாபதி. இந்தப் படத்தில் இருவருக்கும் சண்டையே வந்துவிட்டதாம். என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் படத்தில் நடித்த ஒரு சில காதல் காட்சிகளுக்கு உயிர் ஊட்டுவதற்காக தனது சின்ன சின்ன சண்டைகளை மறந்து அருமையாக நடித்தார்களாம்.

நடிகர் திலகத்துடன் பானுமதி 10 படங்களில் இணைந்து நடித்துள்ளார். கள்வனின் காதலி, தெனாலி ராமன், ரங்கோன் ராதா, மக்களைப் பெற்ற மகராசி, மணமகன் தேவை, ராணி லலிதாங்கி, அம்பிகாபதி, சாரங்கதாரா, ராஜபக்தி, அறிவாளி என்ற படங்கள் தான் அவை. நடிகர் திலகம் குறித்து பானுமதி ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன். எல்லா ஹீரோக்களும் என்னை நெருங்க பயப்படுவார்கள். சிவாஜி போல திறமையான நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக்கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர் என்றாராம்.
 

Leave a Reply