• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதுமையில் இளமை விஷயத்தில் இவரை அடித்துக்கொள்ள எவரும் இல்லை.

சினிமா

கிட்டதட்ட 83 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நடிகர், இன்றும் அதே மிடுக்கு, அதே இளமை, அதே துடிப்பு.
ஆம் நடிகர் சிவக்குமார் தான்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் காலம் தொட்டு விஜய் அஜீத் காலம் வரை இவர் ஏற்காத வேடங்கள் இல்லை. நடிப்பில் கிட்டதட்ட மூன்று தலைமுறையை பார்த்தவர் என்றே சொல்லலாம்.
விக் இல்லை, மேக்கப் இல்லை. குரலில் நடுக்கமோ தளர்வோ இல்லை. தன் திரைவாழ்க்கையில் எந்தவித கெட்ட பெயரும் இல்லாதவர்.
இத்தனை வருஷமா தொய்வில்லாம அதே உற்சாகத்தோட நான் அடுத்தடுத்து பயணப்படுறதுக்கு அடிப்படை காரணம் என் உடம்பையும் மனசையும் நான் ஆரோக்கியமா வச்சுகிருக்கிறதுதான். ஆரோக்கியம்தான் எல்லாத்தையும்விட பெரிய சொத்து.

மனிதன் உயிர்வாழ ரொம்ப முக்கியமானது காற்று. காற்றுக்கு அப்புறம் தண்ணீர், பிறகு உணவு. மகாத்மா காந்தி சாப்பிடாம 20 நாள் இருந்திருக்கார். தண்ணி குடிக்காம ரெண்டுநாள் தாக்குப் பிடிக்கலாம். ஆனா, சுவாசிக்காம ரெண்டு நிமிஷம்கூட உயிரோட இருக்க முடியாது. பிராண வாயுங்கிறது உயிர் மூச்சு. அது ரொம்ப முக்கியம். பிராணாயாமம்னு சொல்லக்கூடிய மூச்சுப் பயிற்சியை கட்டாயமா செய்யணும். உடற்பயிற்சியைவிட மூச்சுப் பயிற்சி முக்கியம் நம்ம உடம்புக்கு எது தேவையோ, அதை கரெக்ட்டா எடுத்துக்கணும். எது தேவை இல்லையோ, அதை கறாரா ஒதுக்கிரணும். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... நான் காபி டேஸ்ட் பண்ணி 63 வருஷம் ஆகுது. `எவ்வளவு வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட மறக்காதீங்க.’ அட்லீஸ்ட் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்னு என்கிறார் சிவகுமார் அவர்கள்.

Rj Nila
 

Leave a Reply