• Welcome to TamilsGuide
செய்திகள் 1

38 வயது பெண்ணை துப்பாக்கியால் சுட்ட புலம்பெயர் சிறுவன்

அமெரிக்காவில் 15 வயது வெனிசுலா சிறுவன் சுற்றுலாப் பயணிப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக கைது செய்யப்பட்டார். டைம்ஸ் சதுக்கத்தில் Sneakers வாங்க காத்திருந்த பெண்ணொருவரை, 15 வயது சிறுவன் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
  
எனினும் அவரை பொலிஸார் விரட்டிச் சென்றபோது, குறித்த சிறுவன் இருமுறை மோசமாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான 38 வயது பெண் பிரேசிலைச் சேர்ந்தவர் என பின்னர் தெரிய வந்தது. அவரது காலில் சிறுவன் சுட்ட குண்டு பாய்ந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சிறுவனின் நண்பர் கைது செய்யப்பட்டார். பின்னர் தப்பிச் சென்ற சிறுவன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 13,500 டொலர்கள் வெகுமதி அளிப்பதாக, சிசிடிவி காட்சிகளில் பதிவான புகைப்படங்களை வெளியிட்டு NYPD அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஒருநாள் தேடலுக்கு பிறகு Yonkers பகுதியில் துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Jesus Alejandro Rivas Figueroa என்ற அந்த சிறுவன் வெனிசுலாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டபோது Figueroa கதறி அழுதுள்ளார். 

Leave a Reply