• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…

சினிமா

புரட்சித்தலைவர் ஒரு நல்ல நடிகர், இயக்குனர் மட்டுமல்ல. அவர் ஒரு நல்ல ரசிகரும் கூட. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்ததால் பல நடிகர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தவர். அதனால்தான் மூத்த மற்றும் சிறந்த நடிகர்களுக்கு உரிய மரியாதையை அவர் கொடுப்பார். எம்.கே.தியாகராஜ பகவாதர், டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, ரங்கராவ் என மூத்த கலைஞர்களை மதித்து வாழ்ந்தவர் இவர்.

80களில் விஜயகாந்த் பிரபலமான நேரங்களில் அவரை எம்.ஜி.ஆரும் தெரிந்து வைத்திருந்தார். ஒருநாள் நள்ளிரவு அவர் தனது காரில் வீட்டிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அடுத்தநாள் ரிலீஸ் ஆகும் விஜயகாந்தின் புதிய படத்திற்கு அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிகொண்டிருந்தனர்.

சாலைகளில் இரவு நேரங்களில் யாராவது வேலை செய்துகொண்டிருந்தால் அவர்களை அழைத்து விசாரிப்பது எம்.ஜி.ஆரின் பழக்கம். அப்படி அவரை அவர்களை அழைத்து விசாரித்தபோது ‘எங்கள் தலைவர் படம் நாளைக்கு ரிலீஸ்.. அதனால போஸ்டர் ஒட்டுகிறோம்’ என சொல்ல எம்.ஜி.ஆர் ஆச்சர்யப்பட்டார். தனது டிரைவரிடம் ‘என்னைப்போலவே விஜயகாந்துக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பின்னாளில் அரசியலுக்கு வந்தால் பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கு’ என சொன்னாராம்.

பல வருடங்களுக்கு முன்பே ஒரு வீடியோவில் பேசிய விஜயகாந்த் ‘எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். நான் சினிமாவில் நடிக்க துவங்கியதும் எப்படியாவது எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், ஜானகி அம்மாவிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் நடித்த உழவன் மகன் படத்தை எம்.ஜி.ஆர் அடிக்கடி விரும்பி பார்ப்பார் எனவும், அப்படத்தில் நான் மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டே பாடும் பாடலை அடிக்கடி பார்த்து ரசிப்பார் என சொன்னார்.

அதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது. ஜானகி அம்மாள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த அன்புடன் இருந்தார். வெளியூர் சென்றால் என் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி வருவார். என் இரு மகன்கள் பிறந்தபோதும் நேரில் வந்து ஆசிர்வாதம் செய்தார்’ என விஜயகாந்த் கூறியிருந்தார்.
 

Leave a Reply