• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய தொழில் தொடங்கும் நடிகை சிநேகா

சினிமா

நடிகை சிநேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சிநேகா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

புன்னகை அரசி என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும் சிநேகா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் "GOAT" படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்கின்றனர்.

அதுபோல், நடிகை நயன்தாரா அழகு, உணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் செய்து கொண்டிருகிறார்கள்.

அப்படித்தான் நடிகை சிநேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார்.

நடிகை சிநேகா "சிநேஹாலயா சில்க்ஸ்" என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா வருகிற 12ம் திகதி நடக்க இருக்கிறது.

இதற்காக பத்திரிக்கை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா.

நடிகை சிநேகாவின் புதிய பிசினஸிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a Reply