• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு

சினிமா

இன்று 31/1/24 புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு ஜெமூவிஸ் டிவியில்
பிரஸ்டீஜ் பத்மநாபனுக்கு ரிடையர்டே இல்லை!  ‘வியட்நாம் வீடு’க்கு 54 வயது
படத்தில் ரிடையர்மெண்ட், அதற்குப் பிறகான வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியிருப்பார். ஆனால் நிஜத்தில், பிரஸ்டீஜ் பத்மநாபனுக்கு ரிடையர்டே கிடையாது. அவரை எவராலும் மறக்கவே முடியாது. இதுவும் பத்மநாபனின் பிரஸ்1970 ஆம் ஆண்டு  ஏப்ரல் 11 வெளியான 
"வியட்நாம் வீடு" 
"வியட்நாம் வீடு" திரைப்படத்தில் இடம்பெற்ற
'உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ'...இந்தப் பாடலில் சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் வேற லெவலில் இருக்கும். பாராட்ட வார்த்தைகளே இல்லை பிரெஸ்டிஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார் இந்தப்படத்தில்.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். தமிழ் சினிமாவின் சகாப்தம். அர்ப்பணிப்பின் அவதாரம்.. நேரப்பண்பாளர். கலைஞர் அவர்களின் புரட்சிகர வசனங்களை தனக்கே உரிய எழுச்சியில் கர்ஜித்த நாயகன்.
யுகங்களால் கடுகளவு கூட கரைக்க முடியாதவர். உலகம் கண்ட தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் பலவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் உயர்ந்து நின்ற சிம்மக் குரலின் நினைவு தினம் இன்று.. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை சிவாஜி கணேசன். எவரோடும் ஒப்பிட முடியாத தனித்துவம் வாய்ந்தவர்.. இவர் நடிப்பில் மட்டுமல்ல..வாயசைத்துபாடும் பாடல்கள் ஒவ்வொன்றிலும் வாழ்ந்து இருப்பார்.
தமிழகத்தில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் படங்கள் மூலமும், பாடல்கள் மூலமும் பரப்பியவர்.
தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி பல சுதந்திர போராட்ட வீரர்களாக, தியாகிகளாக தனது தேர்ந்த நடிப்பால் நம்மோடு(இன்றும்) வாழ்பவர் . இப்படி இவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவர் படத்தில் பாடிய   சில பாடல்களை பற்றி சற்று வித்தியாசமாக எழுதலாம்.என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு..
"தியாகம்" திரைப்படத்தில் இடம் பெற்ற' நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி...ஓன்று தெய்வத்தின் சாட்சியம்மா..." என்ற அதி அற்புதமான பாடலில் நடிகர் திலகம் சும்மா நின்று கொண்டே முகத்திலேயே பாடலின் சோகத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
'ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை... அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை...செம செம..செம.நடை. நடையழகர். நடிகர் திலகம் மொத்த பாடலுக்கும் தன் உடல் அசைவில் உயிர் தந்து இருப்பார்
" நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா?..." நின்றாலே நடிப்பு என்பது நடிகர் திலகத்துக்கு மட்டும்தான் பொருந்தும். இந்த பாட்டிற்கு வேறு எந்த நடிகரையாவது நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம்... வாய்ப்பே இல்ல ராசா.... நடிகர் திலகத்தால் மட்டும் தான் இப்படி நடிக்க முடியும். ஒரே இடத்தில் நின்னுகிட்டு நம்மள கண்கொட்டாமல் ரசிக்க வைக்க நடிகர் திலகம் ஒருவரால் மட்டுமே முடியும். இன்னல் வரும் வேலைகளில் மனிதன் இப்பாடலைக் கேட்டால் அவன் மனதில் கண்டிப்பாக அமைதி பிறக்கும். வாழ்க்கை என்ற படகு உலக வாழ்வில் சுழன்று உலாவுவதை அற்புதமாக சித்தரிக்கும் பாடலிது நல்லவர்க்கெல்லாம் வழி துணை இந்த பாடல்.
"வியட்நாம் வீடு" திரைப்படத்தில் இடம்பெற்ற
'உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ'...இந்தப் பாடலில் சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் வேற லெவலில் இருக்கும். பாராட்ட வார்த்தைகளே இல்லை பிரெஸ்டிஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார் இந்தப்படத்தில்.
"ரிஷி மூலம்" திரைப்படத்தில் 'நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத.."
பாட்டு எழுத நேரம் தேடும் மனையறம்... கணவன் மனைவி இணக்கம் தான் சிறந்த இல்லறம் ... என்பதை சொல்லாமல் சொல்லும். இரவு நேர சேட்டைகளோடு ஆரம்பிக்கும் இந்தப் பாடல் கணவன் மனைவியின் அன்பையும் இல்லற வாழ்வில் இறுக்கத்தையும் அவ்வளவு அழகாய் சொல்லும்...
1979 ஆம் ஆண்டு கே. விஜயன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 'திரிசூலம்' படம் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்ற பெருமையுடன் வெளிவந்தது. இந்தப் படத்தில் கவியரசர் எழுதி எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ்பிபி அவர்களும் கே ஜே ஜேசுதாஸ் அவர்களும் பாடியபாடல்' இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்... பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன... என்ற பாடலை மிக அருமையாக திரையில்பாடிஇருப்பார் நடிகர் திலகம். திரையில் நடிகர் திலகம் மூன்று வேடத்தில் கலக்கி இருப்பார் இந்த படத்தில்..
" முதல் மரியாதை"யிலோ
பூங் காத்து திரும்புமா
என் பாட்ட விரும்புமா... ''
என்று அழகாய் நம்மை கேள்வி கேட்டிருப்பார் .
சிவாஜி கணேசன்
இந்த பாடலின் இரண்டு வரிகள் போதும் நாம் எந்த வயதில் இருந்தாலும் அந்த வயதில் இனிய நினைவுகளை எழுப்ப ...
"மெத்த வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல..."
காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை அழகாக உணர்த்தியிருப்பார். பாடலின் ஆரம்பத்தில் வருத்தமாக இருந்த சிவாஜி, பாடல் முடியும் தருணத்தில் மகிழ்வான நிலைக்கு வந்திருப்பார். (நாமும் தான்) முழு திரைப்படத்தைப் போலவே ஒரு சோகமான ஆரம்பம், இடைநிலை மகிழ்ச்சியான முடிவு என அனைத்தும் இருப்பது இந்த பாடலின் சிறப்பு. மனதில் உள்ள துன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மனபாரம் குறையும் என்பதற்கு சரியான உதாரணம் இந்தப் பாடல். மனதை ஆறுதலாக வருடும் இந்தப் பாடல் உணர்வற்ற உடலுக்கு உயிரைத் தரும்.

இப்படி எத்தனையோ திரைப்படங்களில் , காதலியுடன் பெற்றோருடன், மனைவியுடன் சகோதர சகோதரியுடன், நண்பனுடன் இணைந்து பாடி இருப்பார் நடிகர் திலகம். இது எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக "பந்தம்" திரைப்படத்தில் பேபி ஷாலினியுடன் 'பேபி பேபி ஓ மை பேபி குட்டி கதை சொல்லவா... என்று மிக அருமையாக பாடி நடித்து இருப்பார்.
மனதில் உள்ள காயங்களை குணப்படுத்த இவரின் நடிப்பில் வெளிவந்த படங்களைப்பார்த்தால் போதும். காயங்கள் மட்டுமல்ல காயங்களின் சுவடே இல்லாமல் ஆக்கும் அபூர்வ சக்தி இவரின் நடிப்புக்கு மட்டுமே உண்டு.... இப்படி தமிழர்களுக்கும் தமிழ் திரை துறைக்கும் பெருமை சேர்த்த  அவரை போற்றி வணங்குவோம். உலகம் உள்ளவரை தமிழ் உள்ளவரை கலை உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

Devakottai Dolphin AR Ramanathan

Leave a Reply