• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மைக் மோகனை வைத்து ஆர் சுந்தர்ராஜன் ஹிட் அடித்த 5 படங்கள்.. வெள்ளி விழா கண்ட பயணங்கள் முடிவதில்லை

சினிமா

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன். இவரது படங்கள் பொதுவாகவே பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்திருக்கும். அதிலும் இவரது படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட மோகன் வைத்து இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கிய 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

மெல்லத் திறந்தது கதவு:
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மெல்லத் திறந்தது கதவு என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இதில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆனது. மேலும் இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

சரணாலயம்:
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு சரணாலயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், நளினி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் எஸ்.எஸ் சந்திரன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார். இதில் வரும் அனைத்து பாடல்களையும் வாலி மற்றும் கங்கை அமரன் எழுதி உள்ளார்கள். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக வெற்றி பெற்றது.

நான் பாடும் பாடல்:
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு நான் பாடும் பாடல் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகுமார், மோகன், அம்பிகா, பாண்டியன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் மாங்கல்ய பந்தம் என ரீமேக் செய்யப்பட்டது.

குங்குமச்சிமிழ்:
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு குங்குமச்சிமிழ் திரைப்படம் வெளியானது. இதில் மோகன், இளவரசி, ரேவதி மற்றும் சந்திரசேகர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பொதுவாகவே மோகன் படம் என்றால் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் வர வைக்கிற அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த படங்கள் சற்றும் வித்தியாசமாக கிளைமாக்ஸில் மகிழ்ச்சியாக முடியும். அதுவே இந்த படத்தின் சிறப்பாக இருக்கும்.

பயணங்கள் முடிவதில்லை:
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் மோகன், பூர்ணிமா, எஸ்.வி சேகர் மற்றும் கவுண்டமணி போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் மோகன் பாடகராக நடித்திருப்பார். இத்திரைப்படம்  175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழா திரைப்படமாக மாறியது.
 

Leave a Reply