• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழிசை நிகழ்வு

கனடா

டுறம், தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடாத்திய , 15 ஆவது தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் விழா 20/01/2024.

இந் நிகழ்வில் மிது கான லயம் நுண்கலைக்கூட மாணவர்கள் வழங்கிய "தமிழிசை" நிகழ்வு. இவ் இசை நிகழ்வுக்கு பக்கவாத்திய இசை வழங்கியவர் நந்தி நுண்கலைக்கூட மாணவன் நேத்திரன் ரவீந்திரன்.

தமிழ் கலாசார அறிவியல் சங்கமானது எமது மிது கான லயம் நுண்கலைக் கூட மாணவர்களுக்கு அமைத்துக் கொடுத்த பொது மேடைகள் பற்பல. “இயல்வது கரவேல்” என்றும் “ஊக்கமது கைவிடேல்” என்றும் எமக்கு எப்போதும் ஓர் ஊக்கமாத்திரைகளாக இவர்கள் இருந்து வருவது நாம் செய்த தவம் என்றே சொல்ல வேண்டும்.  இளையதலைமுறையை நன்னிலைப்படுத்துவதோடுமட்டும் நின்றுவிடாமல் சமூகப்பணிகள் பலவற்றையும் தன் கடமை உணர்ந்துஆற்றிவருகிறது. இவ் அமைப்பில் பணிபுரிவோர் அனைவரும் தம் பொன்னானபொழுதுகளை தன்னலங்கருதாத தகைசார் பணிகளுக்காக எந்நேரமும் அர்ப்பணிக்க சித்தமாய் உள்ளவர்கள். இவர்கள் பணி என்றும் நன்றியுணர்வோடு போற்றப்படவேண்டியது.

 

 

Leave a Reply