• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா பிரம்ரன் மாநகர சபையில் தைப் பொங்கல் திருநாள் 

கனடா

தமிழர் திருநாளான தைப் பொங்கல் திருநாள் கனடா பிரம்ரன் மாநகர சபையில் இன்று உத்தியோக பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை குறித்தும், தை முதல் நாள் சிறப்புகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் ஏராளமான பாடல்கள் உள்ளன. அந்த வகையில், “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை பாடலிலும், “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று புறநானூறு பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு பாடலிலும், தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் இருப்பதால், சங்ககாலம் தொட்டே, தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

தமிழர்கள் மாத்திரமன்றி பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் பிரம்ரன் மாநகர சபை மண்டபத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் புது வருடத் தினத்தையும் தமிழர்களின் பாரம்பரிய தினமாக பிரம்ரன் மாநகர சபையினால் இன்று கொண் டாடப்பட்ட இப் பொங்கல் விழா உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை உவகை கொள்ளச் செய்யும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொங்கலாகும்.

 “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். அதனால் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இன்புற்றிருக்க இன்று முதல் புதிய வழி பிறக்கும். எங்களை அடையாளப் படுத்தும் எமது கலாச்சார பாரம்பரி யங்களை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் மாண்புமிகு பற்றிக் பிரவுன் உரையாற்றுகையில் பல்லின மக்கள் வாழும் மாநகர சபையில் தமிழ் மக்களின் பொங்கல் திருநாள் கொண்டப்படுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. தமிழ் மக்கள் சிறந்த பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தினையும் கொண்டவர்கள். அத்துடன் கடின உழைப்பாளிகள். தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்மை ஏற்பட வாழ்த்துகிறேன் என்றார்.

நடனம் என்பது மனதின் பரவசங்களை ஒரு தேர்ந்த உடல் மொழியில் நிகழ்த்திக் காட்டும் ஒரு வசீகரமான அழகியல் வடிகாலாக காலம் காலமாக மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒரு வடிவமாக உள்ளது. குறிப்பாக நம்முடைய பரத நாட்டிய வடிவம் அதிக நுட்பங்களுடனும், விசாரணைகளுடனும் எண்ணற்ற சிறு சிறு இழைகளுக்குள் ஊடுருவிச் சென்று விரிவுகள் கொள்ளும் தன்மைகளுடன் மேலும் மேலும் கூடுதலான தேர்ச்சிகளை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது. மரபு சார்ந்த குறிப்பிட்ட பாவங்களை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு சிறப்பான நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டு வரும் எண்ணற்ற கலைஞர்கள் நம்மிடையே உண்டு என்றாலும் கலையை வாழ்வின் ஊடாட்டமாக ஏற்று சமகால இருப்பு மற்றும் சிந்தனை சார்ந்த பல்வேறு உணர்வுகளை கலையின் ஊடாக அடையாளம் கண்டு அவைகளுக்கு வடிவம் கொடுக்க முனையும் கலைஞர்கள் வெகு சிலரே நம்மிடம் உண்டு. மரபான வெளிப்பாடுகளுக்கு இடையிலும் புதிய அர்த்தங்களையும், விளக்கங்களையும் உருவாக்குவதற்கு இடமிருப்பதை உணர்ந்து அந்த வடிவமைப்புக்குள்ளேயே புதுப்புது வடிவங்களை உருவாக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். உண்மையில் நம்முடைய தொன்மங்களும் காவியங்களும் அதற்கான எண்
ணற்ற திறப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருவதை நாம் பார்க்க முடியும். அவைகளை அடையாளம் கண்டு புதிய படைப்புகளுக்கான களமாக அவைகளை மாற்ற முயல்வதே படைப்புக் கலைஞர்கள் முன் உள்ள சவாலாக உள்ளது. உண்மையில் இது போன்ற முயற்சிகளே மரபிற்கு ஒரு நவீன முகத்தையும், புதிய உயிரோட்டத்துக்கான சாத்தியங்களையும் வழங்கி நடனத்தை வாழ்வுடன் இணைந்த என்றும் புதிய வடிவமாக நிலைபெறச் செய்கிறது. இன்று நடந்தேறிய இரு சிறப்பான நிகழ்வுகளிலும் பார்க்க முடிந்தது. கலையின் மூலமாக வாழ்நிலை குறித்த அழகுணர்வையும் புரிதலையும் மேம்படுத்தும் களமாக நாட்டியம் செயல்படுவதற்கான பல சாத்தியங்களை இது போன்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் புலப்படுத்துவதை இந்த நிகழ்வுகளில் உணர முடிந்தது.

பொங்கல் திருநாளைக் கொண்டாட உதவிய தமிழ் அமைப்பினர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளை வழங்கியோருக்கும், இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்த ஊடகத்தினருக்கும் உதவும் பொற் கரங்களின் தலைவர் திரு விசு கணபதிப்பிள்ளை அவர்கள் நன்றிகளை தெரிவித்தார். மேலும் விசு அவர்கள் எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம் என தமிழ் பிசியிடம் கூறியிருந்தார்.
 

Leave a Reply