• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் நிஜமாகவே மொட்டை அடித்தாரா? நிஜம் என்ன?

சினிமா

பொதுவாக தனது படங்களில் பெரும்பாலும் கெட்டப் மாற்றி நடிக்காத எம்.ஜி.ஆர் எங்கள் தங்கம் படத்தின் ஒரு காட்சியில் மொட்டை தலையுடன் தோன்றிருப்பார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான எங்கள் தங்கம் திரைப்படத்தின் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் மொட்டை அடித்தது போல் வந்திருப்பார். இந்த காட்சிக்காக அவர் உண்மையிலேயே மொட்டை அடித்தாரா என்பது குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1970-ம் ஆண்டு வெளியான படம் எங்கள் தங்கம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படத்தை முரசொலி மாறன் தயாரித்திருந்தார். ஜெயலலிதா நாயகியாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

பொதுவாக தனது படங்களில் பெரும்பாலும் கெட்டப் மாற்றி நடிக்காத எம்.ஜி.ஆர் இந்த படத்தின் ஒரு காட்சியில் மொட்டை தலையுடன் தோன்றியிருப்பார். இந்த காட்சி அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஒரு காட்சிக்காக எம்.ஜி.ஆர் மொட்டை அடித்தாரா அல்லது இது மேக்கப்பா என்று பலரும் அப்போதே கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதனிடையே 53 வருடங்களுக்கு பிறகு தற்போது இது குறித்து பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் விளக்கம் அளித்துள்ளார். எங்கள் தங்கம் திரைப்படம் வெளியான காலக்கட்டத்தில் அவ்வளவாக மேக்கப் வசதிகள் இல்லை. ஆனால் அந்த காலக்கட்டத்திலும் எம்.ஜி.ஆர் உண்மையாக மொட்டை அடித்தாரா என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர்-க்கு மொட்டை மேக்கப் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

Thiyaghu Ktr

Leave a Reply