• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரிசூலம்: வசூலில் சாதனை படைத்த சிவாஜியின் 200-வது படம்...!

சினிமா

எம்.ஜி.ஆர் சொன்ன செய்தி...

எம்..ஜி.ஆர் சொன்ன செய்தி இன்னும் சுவாரஸ்யமானது. 27/1/1979 வெளியானது வருடம் 1979. நடிகர் திலகத்தின் 200வது படமான திரிசூலம் வெளியாகி நூறு நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நேரம். 
அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழக முதல்வர் எம்..ஜி.ஆர் அவர்களை அழைப்பதற்காக நடிகர் திலகம் கோட்டைக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் "என்ன கணேசு! உன் 200வது படம் எப்படி போகுது" என்று கேட்க அதற்கு சிவாஜி "பரவாயில்லை! நல்லா போகுதுன்னு சொல்றாங்கண்ணே" என்று பதில் சொன்னாராம். "பரவாயில்லையா?" என்று கேட்டு இன்டர்காம்-ல் ஏதோ கூப்பிட்டு சொன்னாராம். சற்று நேரத்தில் ஒரு பைல் அவர் டேபிளுக்கு வந்ததாம். அதை திறந்து காட்டி விட்டு இது கமர்ஷியல் டாக்ஸ் [வணிக வரி துறை] பைல். இதிலே உன் படம் எந்தெந்த ஊரிலே எவ்வளவு நாள் ஓடியிருக்கு எவ்வளவு வசூல் ஆயிருக்கு எல்லாம் இருக்கு. கவர்மென்ட்க்கு வரியா எவ்வளவு வருமானம் கிடைச்சிருக்குனு பார்த்தா இதுவரைக்கும் தமிழ் சினிமா மூலமா இவ்வளவு நாளிலே இவ்வளவு வருமானம் வேற எந்த படத்திற்கும் வந்ததில்லைன்னு எனக்கு நோட் போட்டு அனுப்பிச்சிருக்காங்க, நீ என்னடானா பரவாயில்லைனு சொல்றே என்று கேட்டாராம் எம்.ஜி.ஆர். ஆனால் 

சிவாஜிக்கு அந்த வசூல் விவரங்கள் தெரியாது என்பதை எம்.ஜி.ஆர் பிறகு தெரிந்துக் கொண்டாராம். தமிழ் திரைப்பட துறைக்கு அரசாங்கம் சில சலுகைகளை கொடுப்பதற்கு திரிசூலம் ஒரு காரணமாய் இருந்தது என்று ராம்குமார் அந்த நிகழ்ச்சியில் சொன்னாராம்.

Annadurai Duraisamy
 

Leave a Reply