• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எழுத்தாளர் இயக்குனர் கோமல் சுவாமிநாதன் 

சினிமா

எழுத்தாளர் இயக்குனர் கோமல் சுவாமிநாதன் பிறந்த நாள்   இன்று(ஜனவரி 27),. கோமல் சுவாமிநாதன் (1935 - 1995) ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். 

1971ல் திரையுலகில் இருந்து விலகி சொந்தமாக நாடகக்குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு முறைக்கு மேல் மேடையேறின. கோமல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஆரம்ப காலத்தில் சில நகைச்சுவை நாடகங்களை எழுதிய இவர், பொதுவாக சமகால அரசியல் பிரச்சினைகளையும் அறப் பிரச்சினைகளையுமே எழுதினார். தீவிரமான இடதுசாரிப் பிடிப்புடையவராக இருந்தார்.

1980ல் இவர் எழுதிய [தண்ணீர் தண்ணீர்] என்ற நாடகம் கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் சேர்த்தது. அதைத் தொடர்ந்து அவரது பல நாடகங்கள் படமாக ஆயின. கோமல் யுத்த காண்டம் (1982), அனல் காற்று (1982), ஓர் இந்தியக்கனவு (1983) ஆகிய மூன்று படங்களை இயக்கினார்.

Sankar Sankar  

Leave a Reply