• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Amazon நிறுவனர் Jeff Bezos வீடு விற்பனைக்கு.

உலகின் டாப் கோடிஸ்வரர்களில் ஒருவரான Amazon நிறுவனர் Jeff Bezos வசித்த வாடகை வீடு இப்போது விற்பனைக்கு வந்துள்ளது.

Amazon உலகின் மிகப்பாரிய இ-காமர்ஸ் நிறுவனமாகும். அதனை உருவாக்கியவர் Jeff Bezos.

புதிய கனவோடு தொழிலை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர்.

ஆனால் முன்பு வாடகை வீட்டில்தான் இருந்தார். இவர் அமேசான் நிறுவனத்தை தொடங்கிய வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஜெஃப் பெசோஸ் தனது கேரேஜில் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். அது ஜெஃப்பின் சொந்த வீடு அல்ல.

இந்த வீட்டில் Jeff Bezos (Jeff Bezos) மற்றும் அவரது மனைவி Mackenzie Scott ஆகியோர் வசித்து வந்தனர்.

1990களின் நடுப்பகுதியில் வாஷிங்டனில் உள்ள Bellevueவில் உள்ள சியாட்டிலுக்கு அருகிலுள்ள இந்த வீட்டில் பெசோஸ் வசித்து வந்தார்.

இந்த வீட்டில் புத்தகங்கள் விற்க ஆரம்பித்தார். அமேசான் 1994இல் இங்கிருந்து தொடங்கியது. அமேசானின் பழைய Sign Board இந்த வீட்டில் அமைந்துள்ளது.

வீட்டின் விலை எவ்வளவு?

இப்போது இந்த வீட்டை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் விற்க முன்வந்துள்ளது. அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜான் எல். ஸ்காட்டின் இணையதளத்தில் இந்த வீட்டைப் பற்றிய தகவல்களைக் காணலாம்.

இந்த வீடு 1540 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. ஜான் எல் ஸ்காட் வீட்டை 2,280,000 டாலர்கள் அதாவது இலங்கை பணமதிப்பில் ரூ. 73 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளார்.

இதுவரை யாரும் இந்த வீட்டை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்த வீடு முன்பு 2019-ல் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. பின்னர் அதன் விலை 1.5 மில்லியன் டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இது பழைய வீடு

ரியல் எஸ்டேட் அதிகாரிகள் கூறிய தகவலின்படி, இந்த வீடு மிகவும் பழமையானது. இந்த வீடு 1954-ல் கட்டப்பட்டது. இந்த வீடு 2001-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெஃப் பெசோஸ் வாழ்ந்த வீட்டில் கிரானைட் மற்றும் மேப்பிள் தளங்கள் உள்ளன. வீட்டைச் சுற்றி தோட்டம் உள்ளது. வீட்டின் பின்புறத்தில் ஒரு party deck மற்றும் hot tub உள்ளது.

ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு என்ன? 

ஜெஃப் பெசோஸ் தற்போது அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் 2021-ஆம் ஆண்டில் அமேசானின் செயல் தலைவராக ஆவதற்கு CEO பதவியில் இருந்து விலகினார்.

ஜெஃப் பெசோஸ் இப்போது அமேசான் நிறுவனத்தில் பத்து சதவீதத்தை வைத்திருக்கிறார். ஜெஃப் பெசோஸ் தற்போது ரொக்கெட்டை உருவாக்கும் விண்வெளி நிறுவனமான Blue Origin மற்றும் Washington post ஆகியவற்றை வைத்திருக்கிறார்.

தற்போது உலகின் இரண்டாவது பெரும் பணக்காரங்க இருக்கும் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $184 பில்லியன் ஆகும்.

ஜெஃப் பெசோஸ் திருமண வாழ்க்கை

ஜெஃப் பெசோஸ் அவரது மனைவி மெக்கன்சி ஸ்காட்டிடமிருந்து பிரிந்தார். அவர்கள் 2019இல் விவாகரத்து செய்தனர். திருமணமாகி 25 வருடங்கள் கழித்து பிரிந்த ஜெஃப் பெசோஸ், அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகளை தனது மனைவிக்கு வழங்கியுள்ளார்.
 

Leave a Reply