• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொந்த நாட்டு மக்களை எச்சரித்த சீனா

அழகிகளை நம்பி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள், அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சீனா தன் குடிமக்களை எச்சரித்துள்ளது. சீன நாட்டவர் ஒருவர், இரவு விடுதி ஒன்றில் ஒரு அழகான பெண்ணை சந்தித்து அவர் அழகில் மயங்கியதாகவும், பின்னர் அவர் வெளிநாட்டு உளவாளிகளால் பிளாக் மெயில் செய்யப்பட்டதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லீ சி ( Li Si) என்பவர், இரவு விடுதி ஒன்றிற்குச் சென்றிருந்தாராம், அங்கே, நீங்கள் எத்தனை அழகிய பெண்களை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டதாம்.

அதை நம்பி லீ சி அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க, திடீரென சீருடை அணிந்த சில வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைந்து லீ சியை நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்தார்களாம்.

பின்னர் அந்த புகைப்படங்களைக் காட்டி அவரை அந்தக் கூட்டம் பிளாக் மெயில் செய்ய, அவர் பயந்து தனது லாப் டாப்பை அவர்களிடம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம்.

இவ்வாறாக, 10 ஆண்டுகளாக ரகசிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த அந்த கணினி, வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்றிடம் சிக்கிக்கொண்டது என்கிறது சீன பாதுகாப்பு அமைச்சகம்.

’அழகிகளைத் தேடி அலைகிறீர்களா, ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்’ என்ற வாசகம், அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இடுகையில் தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டுள்ளதாம்! 
 

Leave a Reply