• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானிய பாரளுமன்றத்தில் ஈழநாட்டியம்

கனடா

பிரித்தானிய பாராளுமன்ற அரங்கத்தில் ஈழ வேந்தன் ராவணன் புகழ்பாடும் நாட்டியநடனம்.

தமிழ் மரபுத் திங்களை சிறப்பிக்கும் முகமாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் 15.01.2024 திங்கட்கிழமை நடந்த பொங்கல் விழாவில் ஈழநாட்டியம் அரங்கேறியது.எல்லோரும் இராமனைப் பற்றிப் பேசும் இந்த நாட்களில் இராவணன் பெருமை சொல்ல்லும் ஈழநாட்டியம் நம்மவர் நடனமாய் "நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் " என நம் கலாசார  அடையாளமாய் அரங்கேறியமை நம் இலக்கு நோக்கிய பயணத்தில் வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வாய் அமைந்தது.
 

லண்டனில் நடன ஆசிரியையாய் பணி செய்யும் ரகுப்பிரியாவும் அவர் மாணவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் நம் ஈழநாட்டியத்தை அளிக்கை செய்தனர்.பேராசிரியர் விதியானந்தன் நூற்றாண்டில் அவரது கூத்து மீளுருவாக்க மரபில் பேராசிரியர் சி.மெளனகுரு வழியாக வந்த எனது வழிகாட்டலில் உருவான இந்த நிகழ்வு.

ரகுப்பிரியாவும் அவர் மாணவர்களும் ஈழநாட்டியத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் ஆர்வமுடையவர்கள் அதனை அடுத்த கட்டத்துக்கும் நகர்த்தும் திறன் மிக்கவர்கள்.

ரகுப்பிரியா 
 

 

Leave a Reply