• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயிலு 

சினிமா

அதிகமாக பக்தி படங்களில் கடவுள் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பெரிய ஆளுமையாக இருந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1963-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த ஸ்ரீதேவி தனது 4 வயதில் 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் கடவுள் முருகன் வேடத்தில் நடித்து அசத்திய ஸ்ரீதேவி அடுத்து வெளியான துணைவன் படத்திலும் அதே முருகன் வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அதிகமாக பக்தி படங்களில் கடவுள் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி, 1972-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான வசந்தமாளிகை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன்பிறகு 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு காயத்ரி கவிக்குயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் மயிலு என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீதேவி அடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார்

இந்த படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ஜானி, ராணுவ வீரன், போக்கிரி ராஜா, கமல்ஹாசனுடன் வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு, சிகப்பு ரோஜாக்கள்,  உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீதேவி, 1986-ம் ஆண்டு ரஜினிகாந்துடன் நான் அடிமை இல்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் அதிகமாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, சிவாஜியுடன் கவரிமான் படத்தில் மகளாகவும், சந்திப்பு என்ற படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தார். 1986-க்கு பின் இந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ரீதேவி, இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதில் சாந்தினி, சத்மா, லம்ஹே, இங்கிலீஷ் விங்கிலீஷ், மாம் உள்பட அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. அதன்பிறகு 2018-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தின் மூலம் தமிழில் நடித்திருந்தார்.

தொடர்ந்து 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி அங்கேயே மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல படங்களுக்க்காக மாநில விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை வென்றிருந்த ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காமல் இருந்தது.

ஆனால் இவர் கடைசியாக நடித்த மாம் என்ற படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதை வாங்குவதற்குள் அவர் மரணமடைந்து விட்டார். தனது அசாத்திய திறமையின் மூலம் இந்திய திரையுலகை கட்டி ஆண்ட ஸ்ரீதேவி, திரைப்படங்களில் தான் நடிக்கும் கேரக்டராகவே வாழ்ந்தவர். அவர் மறைந்தாலும் அவரின் சிறப்பான பல திரைப்படங்கள் மூலம் இன்றும் மக்கள் மத்தியில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
 

Leave a Reply