• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முத்துராமன் படத்தில் பாடல் வரிகளை திருத்தி எழுதிய ஜெயலலிதா - அதற்கு லாஜிக்காக அவர் சொன்ன காரணம்!

சினிமா

சிறந்த தம்பதிக்கான போட்டியில் இவர்களுக்கு முதல் பரிசு கிடைத்துவிடுகிறது. அப்போது நீங்கள் இருவரும் பாடல் பாடுகின்றனர்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா கவிஞரின் பாடல் வரிகளை மாற்றிவிட்டு இவரே வரிகளை தயார் செய்து பாடிய ஒரு பாடல் பெரிய வெற்றிப்பாடலாக அமைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 1973-ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் சூரியகாந்தி. முத்துராமன், ஜெயலலிதா, சோ, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். தமிழக அரசின் சிறந்த படத்திற்காக விருதை வென்ற சூரியகாந்தி படத்திற்காக ஜெயலலிதா சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருந்தார்.

முத்துராமன் தனது மனைவி ஜெயலலிதா தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதால் அவர் மீது எப்போதும் ஒரு பொறாமை குணத்துடன் இருக்கிறார். இந்த நேரத்தில் சிறந்த தம்பதிக்கான போட்டியில் இவர்களுக்கு முதல் பரிசு கிடைத்துவிடுகிறது. அப்போது நீங்கள் இருவரும் எங்கள் முன் ஒரு பாடல் பாட வேண்டும் என்று முத்துராமன் ஜெயலலிதா இருவருக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அப்போது வரும் பாடல் தான் நான் என்றால் அது நானும் அவளும், அவள் என்றால் அது அவளும் நானும் என்ற பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஜெயலலிதா இணைந்து பாடிய இந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த பாடலை மொத்த பெண்ணடிமை தனத்தின் அடையாளமாக எழுதியிருப்பார் வாலி. ஆனால் பாடலை மேலோட்டமாக பார்த்தால் அப்படி இருக்காது. நான் சொன்னால் அது அவளின் வேதம், அவள் சொன்னால் அது என் எண்ணம் என்ற வரியே இதற்கு உதாரணம்.

இந்த பாடலில் கவிஞர் வாலி எழுதிய வரிகளை ஜெயலலிதா திருத்தவில்லை. அதே சமயம் இந்த பாடலை சற்று கூர்ந்து கவனித்தால், முத்துராமன் பாடல் பாடும்போது ஜெயலலிதா ஆங்கிலத்தில் ஒரு சொல் அல்லது 2 சொல்லில் தனது சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார். இந்த ஆங்கில வரிகளை எழுதியவர் எழுத்தாளர் ரேன்டர்ரவி. ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினரான இவர் பாடல் வரிகளை எழுதி அனுப்புகிறார்.

அதன்பிறகு ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரும் ஜெயலலிதா பாடல் வரிகளை பார்த்துவிட்டு வரிகள் எல்லாம் நீளமா இருக்கு என்று சொல்லி இதை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரே சலிப்பில் மற்றும் கோபத்தில் இருக்கிறார். அவர் எப்படி நீளமாக வரிகளை பாடுவார்.ஒரு சொல் அல்லது 2 சொல்லில் பாடலாம் என்று உரிமையுடன் சொல்கிறார். அதன்பிறகு அந்த பாடலில் சோகத்துடன் ஜெயலலிதாவே வரிகளை எழுதி பாடுகிறார். அந்த பாடலும் வெற்றிப்பாடலாக அமைந்துள்ளது.

Leave a Reply