• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தூங்காமல் நடித்த சிவாஜி... கண்ணீர் வடித்த படக்குழு - இந்த மெகாஹிட் படத்தின் க்ளைமேக்ஸ் இப்படியா?

சினிமா

படத்தின் கதாசிரியர் ஒரு துண்டு சீட்டில் இது அண்ணன் தங்கை காதல் கதை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதை பார்த்த பீம்சிங், இது என்ன சமூகத்திற்கு எதிரான கதையாக இருக்கிறதே என்று நினைத்து அவரை வர சொல்லி கதை கேட்டுள்ளார்.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக 2 நாட்கள் தூங்காமல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து படக்குழுவினரே கண்ணீர் வடித்த சம்பவம் ஒரு மெகாஹிட் படத்தில் நிகழ்ந்துள்ளது.

1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் பாசமலர். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை வீழ்த்தும் அளவுக்கு தமிழ் சினிமாவில் இதுவரை அண்ணன் தங்கை பாசத்தை எடுத்து சொல்லும் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெரிய வெற்றி பெற்ற இந்த படம் இன்றுவரை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கே.பி.கொட்டாராக்கரா என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதியிருந்தார். இந்த படத்தின் கதையை வைத்துக்கொண்டு பல இயக்குனர்களிடம் கதை சொல்ல, முயற்சி செய்துள்ளார். ஆனால் இவரது கதையை யாரும் கேட்க தயாராக இல்லை. இதனால் இந்த கதைக்கு இயக்குனர் பீம்சிங் தான் சரியானவர் என்று கூறி அவரிடம் சென்றபோது, அவரும் கதை கேட்க தயாராக இல்லை என்று தெரிந்துள்ளது.

அதன்பிறகு ஒரு துண்டு சீட்டில் இது அண்ணன் தங்கை காதல் கதை என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இதை பார்த்த பீம்சிங், இது என்ன சமூகத்திற்கு எதிரான கதையாக இருக்கிறதே என்று நினைத்து அவரை வர சொல்லி கதை கேட்டுள்ளார். அப்போது கே.பி.கொட்டாரக்கரா கதையை சொல்ல, பீம்சிங் கதையை கேட்டு, ஆச்சரியமாகி அவரை கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதன்பிறகு படத்திற்கு பாசமிகு அண்ணனாக சிவாஜி, தங்கையாக சாவித்ரி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்

அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. க்ளைமேக்ஸில் சிவாஜி கணேசன் இறந்துவிட வேண்டும். அவருடன் சேர்ந்து அவரது தங்கையான சாவித்ரியும் இறந்துவிடுவார். இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, முகத்தில் சாவதற்காக அறிகுறிகள் தெரிய வேண்டும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்த சிவாஜி, அன்று மாலை வீட்டுக்கு சென்று யாரிடமும் பேசாமல், தனி அறையில் அமர்ந்துள்ளார்.

அதன்பிறகு முகத்தில் சோகம், சோர்வு தெரிய வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் தூங்காமல், புரஜக்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் புரஜக்டரே சூடான நிலையில், அதை ஆஃப் செய்துவிட்டு, அடுத்து என்ன பண்ணலாம் என்று யோசித்த சிவாஜி, தனது வீட்டு கார்டனில் நடந்துள்ளார். 2 நாட்கள் இதையே செய்துவிட்டு 3-வது நாள் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு நான் இந்த சோபாவில் படுத்துக்கொள்கிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. வசனம் சொல்லிக்கொடுக்க ஆரூர் தாஸ், இயக்குனர் பீம்சிங் இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டு படுத்துள்ளார். அதன்பிறகு காட்சிகள் படமாக்கப்பட்டது. சிவாஜி தனது அற்புதமாக நடிப்பை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது நடிப்பின் மூலம் யூனிட்டில் இருந்த அனைவரையும் அழ வைத்துள்ளார். இந்த காட்சியை திரையில் பார்க்கும் அனைவருமே இன்றும் அழுதுகொண்டு தான் இருக்கிறார்கள்.
 

Leave a Reply