• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பட வாய்ப்பு இல்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்... சிபாரிசு செய்த சிவாஜி - இந்த மெகாஹிட் படத்தின் ரகசியம் தெரியுமா?

சினிமா

மலைக்கள்ளன் கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த ஸ்ரீராம்லு நாயுடு, அப்போது முன்னணி நடிகராக இருந்த சிவாஜியை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்.

எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அளித்த படங்களில் முக்கியமானவர் மலைக்கள்ளன். பானுமதி நாயகியாக நடித்திருந்த இந்த கடத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்த நிலையில், இந்த படம் சிவாஜி முடியாது என்று சொன்ன பிறகுதான் எம்.ஜி.ஆர் பக்கம் வந்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று.

1954-ம் ஆண்டு ஸ்ரீராமலு நாயுடு இயக்கத்தில் வெளியான படம் மலைக்கள்ளன். எம.ஜி.ஆர், பானுமதி, இணைந்து நடித்த இந்த படத்தில் டி.எஸ்.துரை, எஸ்.எம்.சுப்பையா, சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாமக்கல் கவிஞரின் கதையில் உருவான இந்த படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருந்த நிலையில், எஸ்.எம்.சுப்பையா நாயுடு இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்த க்ளாசிக் படங்களில் ஒன்றாக இருக்கும் மலைக்கள்ளன் திரைப்படத்தின் கதை ஏற்கனவே கல்லூரி பாடத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கதையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த ஸ்ரீராம்லு நாயுடு, அப்போது முன்னணி நடிகராக இருந்த சிவாஜியை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்.

இதற்காக சென்னை வரும் அவர் சிவாஜியிடம் கால்ஷீட் கேட்கிறார். ஆனால் அப்போது சிவாஜி ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டிருந்தார். அதுவும் இல்லாமல் ஸ்ரீராமுலு நாயுடுவின் பக்ஷிராஜ் ஸ்டூடியோ கோயம்புத்தூரில் உள்ளது. இதனால் அவரை சந்தித்த சிவாஜி

, அண்ணே நான் இப்போது 10 படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும்.

உங்கள் ஸ்டூடியோவும் கோவையில் உள்ளது. ஒரு படத்திற்காக அங்கு வருவது என்பது இப்போதைக்கு என்னால் முடியாத வேலை என்று கூறியுள்ளார். இதை புரிந்துகொண் ஸ்ரீராமலு நாயுடு, இதற்கு வேறு என்னதான் வழி என்று சிவாஜியிடம் கேட்க, அவரே அண்ணன் (எம்.ஜி.ஆர்) இருக்கிறார் அவரிடம் கேட்டுப்பாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த தகவல் கிடைக்கிறது.

ஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஸ்ரீராமலு நாயுடு, இந்த படத்திற்கு நீதான் ஹீரோ ஆனால் கருணாநிதி வசனம் எழுதினால் நான் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்ரீராமலு நாயுடு கருணாநிதியிடம் இந்த படத்திற்கு வசனம் எழுத கேட்டபோது, இது நாமக்கல் கவிஞரின் கதை. அவர் காங்கிரஸ் கட்சிக்காரர். நான் திராவிடம். அவர் கதையில் நான் வசனம் எழுதி எதாவது சிக்கல் வந்தால் இருவருக்குமே சங்கடம் என்று கூறி தவித்துள்ளார்.

இப்போது எம்.ஜி.ஆரிடம் தயாரிப்பாளர் இப்படி சொல்லிவிட்டதால், என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், கருணாநிதியிடம் சென்று, இப்போது எனக்கு பட வாய்ப்பு இல்லை. இந்த ஒரு படம் தான் இருக்கிறது. நீதான் வசனம் எழுத வேண்டும் எனக்காக செய் என்று சொல்ல, நண்பரின் பேச்சை தட்ட முடியாத கருணாநிதி படத்திற்கு வசனம் எழுத ஒப்புக்கொண்ட நிலையில், அப்போது முன்னணி நடிகையாக இருந்த பானுமதி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply