• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு நாள் போதுமா! கண்ணதாசன் எழுதிய பாடலை பாட மறுத்த சீர்காழி - காரணம் என்ன?

சினிமா

இயக்குனரின் வார்த்தையை கண்ணதாசன் பாடலாக மாற்றிய நிலையில், இந்த பாடலை பாட முடியாது என்று சீர்காழி கோவிந்தராஜன் மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் திருவருட்செல்வர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். ஏராளமான பக்தி படங்களை இயக்கியுள்ள இவர், 1965-ம் ஆண்டு திருவிளையாடல் என்ற படத்தை இயக்குகிறார். சிவாஜி, சாவித்ரி, கே.பி.சுந்தராம்பாள், டி.என்.பாலையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில், வடநாட்டில் ஹேமநாத பாகவதர் என்று ஒருவர் இருக்கிறார். அன்றைய நிலைமைக்கு அவரை விட அசத்தலாக பாடக்கூடியவர்கள் யாரும் இல்லை. இதனால் இவர், பல ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் பாடகர்களை தன்னுடன் போட்டிக்கு அழைத்து வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி அனைத்து நாட்டுக்கும் சென்ற அவர், இறுதியாக பாண்டிய நாட்டுக்கு வருகிறார்.

பாண்டிய நாட்டு மன்னன் இவரை வரவேற்க, அவரது அரசவையில் இவர் ஒரு பாடல் பாடி முடிக்கிறார். அதன்பிறகு, எனக்கு இணையாக போட்டி போட்டு பாடக்கூடிய பாடகர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்கிறார். இவரது சவாலை ஏற்க மக்கள் தயங்கும்போது, இறைவனே வரது சவாலை ஏற்று வந்து பாடுகிறார். இந்த பாடலில் அந்த ஆணவம் பிடித்த பாடகர் இறைவனுக்கே சவால் விடும் வகையில் பாடல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் ஏ.பி. நாகராஜன்.

இதை கேட்டு கண்ணதாசன் பாடல் எழுத தொடங்குகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நாள் முழுவதும் யோசித்து பார்க்க ஒன்றும் கிடைக்காத நிலையில், பாடல் வரும் என்று காத்திருந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன், என்ன கவிஞரே இந்த நாள் போதுமா, இல்லை என்னொரு நாள் வேண்டுமா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் மறுபடியும் சொல்லுங்க என்று சொல்ல, அவர் மீண்டும் அதையே கூறியுள்ளார்.

இதை கேட்ட கண்ணதாசன் உடனடியாக அந்த பாடலை எழுதி முடித்துள்ளார். அந்த பாடல் தான் ஒரு நாள் போதுமா, இன்று ஒருநாள் போதுமா என்ற பாடல். பாடல் எழுதி முடித்தபின் யாரை வைத்து பாட வைக்கலாம் என்று யோசிக்கும்போது, சீர்காழி கோவிந்தராஜனை அழைக்கிறார்கள். ஆனால் படத்தில் இந்த பாடலை பாடும் கேரகடர் தோற்றுபோய்விடும் என்தால், தோற்கும் கேரக்டருக்கு என்னால் பாட முடியாது என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிடுகிறார். அதன்பிறகு இந்த பாடலை பாட பாலமுரளி கிருஷ்ணா என்பவர் வருகிறார். அவரது குரலில் வெளியான இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Leave a Reply