• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயலலிதாவுடன் பார்த்த கிரிக்கெட் மேட்ச்- ரொம்ப மிஸ் பண்றேன்: உருகும் நடிகை லதா

சினிமா

திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர் 1977-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார்.

திரையுலகில் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கிக்கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போவதை மிஸ் செய்வதாக பழம்பெரும் நடிகை லதா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் இன்றளவும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு தேவையாக கருத்துக்களுடன் தனது திரைப்படங்களில் கதை அமைய வேண்டும் என்று பார்த்து பார்த்து படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அரசியல் கட்சி தொடங்கிய தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தவர். தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கும் தான் இருந்த திரைத்துறைக்கும் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார்.

திமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர்  1977-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். புதிய கட்சி தொடங்கிய உடனே ஆட்சியை பிடித்த எம்.ஜிஆரிடம் பேட்டி எடுக்க பல பத்திரிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், அவரை முதன் முதலில் பேட்டி எடுத்தவர் ஒரு நடிகை என்பது பலரும் அறியாத ஒரு தகவல் என்று சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1973-ம் ஆண்டு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய நடிகை லதா தான் எம்.ஜி.ஆரை முதன் முதலில் பேட்டி எடுத்த நடிகை. 1973-ல் தொடங்கி 82 வரை பல படங்களில் நடித்த லதா திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் இருந்து விலகிய நிலையில், 10 வருட இடைவெளிக்கு பின் 1992-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்டரி கொடுத்திருந்தார்.

எம்.ஜி.ஆர் லதா

இதனிடையே எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனபோது முதலில் பேட்டி எடுத்தது குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய லதா, நான் முதலில் எம்.ஜி.ஆர்ரிடம் பேட்டி கேட்டபோது, என்ன நீ அரசியலுக்கு வானு சொன்ன வர மாட்ரே பேட்டி மட்டும் கேட்குற என்று கேட்டார். அதெல்லாம் எனக்கு தெரியாது நான் உங்களை பேட்டி எடுத்து ஆக வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவரை பேட்டி எடுக்க பலர் காத்திருந்தனர்.

நான் கேட்டதால் நீ மட்டம் சத்யா ஸ்டூடியோவுக்கு வா மற்றவர்களை எல்லாம் அப்புறம் வர சொல்லு என்று சொன்னார். அங்கு அவரிடம், மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று அவரிடம் முதல் கேள்வியாக கேட்டேன். அதற்கு அவர் இந்த கேள்வி இப்போ கேட்காதே ஒரு 6 மாதங்கள் கழித்து வந்து என்னை கேளு என்று சொன்னார். அதன்பிறகு பல கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவரை முதலில் பேட்டி எடுத்தது மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜெயலலிதா குறித்து பேசிய அவர், ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் இருவருடனும் நண்பராகத்தான் பழகினேன். அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு என்னை பாதிக்கவில்லை. அதேபோல் நானும் ஜெயலலிதாவும் பலமுறை கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஸ்டேடியம் சென்றுள்ளோம். இப்போது டிவியில் பார்த்து விடலாம். ஆனால் அப்போ அந்த வசதி இல்லை. அதேபோல் ஃபார்ஸ்ட் புட் வசதியும் இல்லை. அதனால் கிரிக்கெட் பார்க்க போகும்போது இருவரும் லஞ்ச் எடுத்துட்டு போவோம்.

ப்ரேக் டைமில் இருவரும் காரில் அமர்ந்து சாப்பிடுவோம். எங்களுக்குள் ப்ளானே இருக்காது திடீர்னு ஜெயலலிதா போன் செய்த மேட்ச் பார்க்க போலாமா என்று கேட்பார். உடனே கிளம்பி போய் விடுவாம். மறக்க முடியாத அனுபவம் இது. இப்போது என் பிள்ளைகள் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்று நடிகை லதா கூறியுள்ளார்.

Leave a Reply