• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஸ்வநாதன் நிராகரித்த வாலியின் பாடல் - அப்புறம் அந்தப் பாட்டு செம்ம ஹிட்!

சினிமா

1967-ம் ஆண்டு வெளியான இரு மலர்கள் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய வாலி கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு விவேக் நடிப்பில் வெளியான நான் தான் பாலா என்ற படத்திற்கு பாடல் எழுதியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் ஒருவராக இருக்கிறார். 1967-ம் ஆண்டு வெளியான இரு மலர்கள் என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய வாலி கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு விவேக் நடிப்பில் வெளியான நான் தான் பாலா என்ற படத்திற்கு பாடல் எழுதியிருந்தார்.

47 ஆண்டுகள் தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்களும், எழுதிய புத்தகங்களும் இன்றளவும் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே வாலி மறைந்த தினமான இன்று, அவரது பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நிராகரித்ததும் அதனை வேறு இசையமைப்பாளர் பயன்படுத்தியது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது,

பி,ஆர் பந்தலு படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அந்த படத்திற்கு விஸ்வநாதன் மியூசிக். அதில் ஒரு டூயட் பாடலை நான் எழுதினேன். விஸ்வநாதன் ராமூர்த்தியை விட்டு பிரிந்த வந்து தனியாக இசையமைத்து கொண்டிருந்த காலம் அது. இதில் புத்தம் புது புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் பொதிகை வழிந்த செந்தமிழிமே உன்னை பாட்டில் வைக்கும் கவிஞன் நான் என்ற பாடலை எழுதினேன்.

இந்த பாட்டை கேட்ட விஸ்வாநாதன் ரொம்ப நீளமா இருக்கு கொஞ்சம் சின்னதாக கொடுங்க என்று சொன்னார். அதன்பிறகு வேறு பாடல் எழுதி கொடுத்தேன். அன்றைய தினம் மதியம் அரசக்கட்டளை படத்தின் கம்போசிங் நடந்தது. அந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அந்த படத்திற்கு தேவைப்பட்ட டூயட் பாடலுக்கு இதை கொடுத்து டியூன் போட சொன்னேன். அவர் அருமையாக டியூன் போட்டு கொடுத்தார்.

இந்த பாடல் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த பாடல் எனக்கு பிடித்த முக்கிய பாடல்களில் ஒன்றாகவும் மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply