• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லேட்டா வந்த கண்ணதாசன்... பட்டுக்கோட்டை பாட்டால் பாடம் சொன்ன எம்.ஜி.ஆர்

சினிமா

கண்ணதாசனிடம் பேசிய எம்.ஜி.ஆர், என் சொத்து அனைத்தையும் விற்று படம் எடுக்கிறேன். இந்த படம் ஓடினால் நான் மன்னன், ஓடவில்லை என்றால் நான் நாடோடி என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர் அரசியலிலும் தனது தடத்தை பதித்துள்ளார். சிறுவயதில் நாடக நடிகராக இருந்து பின்னாளில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் பல்வேறு தடைகளை கடந்து 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து சினிமாவில் தனது உயரத்தை அதிகரித்து கொண்ட எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். 1950-காலக்கட்டத்தில் பல படங்களில் நாயகனாக நடித்து வந்த எம்.ஜி.ஆர், தனது பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதலில் வெளியான படம் தான் நாடோடி மன்னன். இந்த படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். பல பிரச்சனைகளை கடந்து வெளியான இந்த திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படம் தயாரிப்பில் இருந்தபோது, எம்.ஜி.ஆர் சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டார். இந்த படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

இந்த படத்திற்காக பாடல் பதிவு நடைபெற்ற போது ஒரு சுவாரஸயமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் குறித்து கண்ணதாசனிடம் பேசிய எம்.ஜி.ஆர், என் சொத்து அனைத்தையும் விற்று படம் எடுக்கிறேன். இந்த படம் ஓடினால் நான் மன்னன், ஓடவில்லை என்றால் நான் நாடோடி, அதனால் நாளை காலை 9 மணிக்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு கண்ணதாசனும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை 8 மணிக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலரும் வந்துவிட்ட நிலையில், கண்ணதாசன் மட்டும் 12.30 மணிக்கு வந்துள்ளார். மன்னித்துவிடுங்கள் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்று சொல்ல, நீங்கள் வரும் வரை எதற்காக டைம் வேஸ்ட் பண்ணணும் என்று சொல்லி பட்டுக்கோட்டையை ஒரு பாடல் எழுத சொல்லியிருந்தேன் என்று சொல்லி ஒரு பேப்பரை கண்ணதாசன் கையில் கொடுத்துள்ளார்.

அந்த பேப்பரில், போர் படை தன்னில் தூங்கியவன் வெற்றியை இழந்தான், உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியை இழந்தான். ஒரு பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால், பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா என்று எழுதியிருந்தது. இதை பார்த்த கண்ணதாசன் லேட்டா வந்ததுக்கு என்னை நாளு அடி அடித்திருக்கிலாம். ஆனால் இப்படி பண்ணிட்டீங்களே, இனி என் வாழ்நாளில் லேட்டா வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply