• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வில்லனாக கமல்; திரில்லர் இயக்கிய பாரதிராஜா - 2 பேருக்கும் முக்கியமான அந்தப் படம்

சினிமா

கமல்ஹாசன் ஆன்டி ஹீரோவாக செட் ஆவாரா என்ற சந்தேகம் இருந்தாலும், படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி அந்த சந்தேகத்திற்கு விடை கொடுத்தது.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் ஆன்டி ஹீரோவாக நடித்து பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த சிகப்பு ரோஜாக்கள் படம் குறித்து தற்போது பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, இந்த படம் 2 பேருக்கு முக்கியமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். பெண்களை கடத்தி கற்பழித்து கொல்லும் ஆன்டி ஹீரோ கேரக்டரில் கமல்ஹாசன் கலக்கி இருந்த இந்த படம் தமிழ் சினிமாவில் லைப்டைம் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் ஆன்டி ஹீரோவாக செட் ஆவாரா என்ற சந்தேகம் இருந்தாலும், படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி அந்த சந்தேகத்திற்கு விடை கொடுத்தது என்று சொல்லலாம். அதேபோல் கிராமத்து கதைகளை இயக்கி வந்த பாரதிராஜா தனக்கு எந்த கதையாக இருந்தாலும் அத்தனையும் அத்துபடி என்று தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருந்தார்.

பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்யும் கமல்ஹாசன், அதே பாணியில் ஸ்ரீதேவியை காதலிக்கிறார். அவரையும் தனது சைக்கொ தனத்திற்கு இறையாக்க கமல்ஹாசன் துடித்தாலும் அவரின் நற்பண்புகளால் கவரப்பட்டு திருமணமும் செய்துகொள்கிறார். ஆனால் அதன்பிறகு தனது கணவன் சைகோ கொலைகாரன் என்று ஸ்ரீதேவிக்கு தெரியவர அடுத்து அவர் என்ன முடிவு செய்தார் என்பது தான் படத்தின் கதை. கமல்ஹாசனுக்கு இணையாக ஸ்ரீதேவியும் நடிப்பில் மிரட்டிய படம்.

175 நாட்கள் திரையரங்குகளில் தனது ஆக்கிரமிப்பை பதிவு செய்திருந்த சிகப்பு ரோஜாக்கள் படம் பல விருதுகளை வென்ற நிலையில், சிறந்த நடிகர் கமல்ஹாசன், சிறந்த இயக்குனர் பாரதிராஜா ஆகியோருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. வருடங்கள் கடந்தாலும் தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளம் என்று அழைக்கப்படும் சிகப்பு ரோஜாக்கள் குறித்து பாரதிராஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சாரதா எனது மனைவி என்று கமல் எழுத விட்டு திரும்புவார். அப்போது ஒரு சொடக்கு போட்ட நிலையில், உடனடியாக கண்களில் இருந்து கண்ணீர் வரும் ஷாட் இருக்கும். இந்தக் காட்சியில் கமலின் பர்பார்மென்ஸ் உலகத்தரத்தில் இருக்கும் என்றும் யாராலும் இதை செய்ய முடியாது. இதுபோன்ற காட்சிகளையும் எளிதாக செய்ததால்தான் கமல் உலகநாயகன்.

கமல் வில்லனாக நடிப்பதால் படத்திற்கு வரவேற்பு இருக்காது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் எனக்கும் கமலுக்கும் மட்டுமே படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என்ற ரகசியம் தெரியும். இந்தப் படத்தின் ரிலீசின்போது தேவி தியேட்டரில் தொடங்கி எல்பின்சன் திரையரங்கம் வரையில் ரசிகர்களின் க்யூ இருக்கும் என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Annadurai Duraisamy

Leave a Reply