• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டி.எம்.எஸ் பாடியதை நீக்கிய இளையராஜா... சிவாஜி படத்தில் செய்த மாற்றம்

சினிமா

இளையராஜா இசையமைத்திருந்த நிவாஜியின் நான் வாழவைப்பேன் படத்தில் இடம்பெற்ற என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.

திரைத்துறையில் இசையில் தனது ஆளுமையை செலுத்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் இளையராஜா பலரின் கோபத்திற்கு ஆளானதாக செய்திகள் உண்டு. அதேபோல் சமீப காலமாக அவர் பேசும் பேச்சு கூட பெரும் சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இளையராஜா இசை என்று வந்துவிட்டால் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று அவரை விமர்சிக்கும் பலரும் கூறுவது உண்டு.

அப்படிப்பட்ட இளையராஜாவுக்கும் தெய்வீக பாடகர் என்று பெயரெடுத்த டி.எம்.சௌந்திரராஜனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பலருக்கும் தெரியாது. 1979-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படம் நான் வாழ வைப்பேன். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம் பெற்ற என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.

பாடல் ரெக்கார்டிங் முடிந்து அந்த பாடலை கேட்ட இளையராஜாவுக்கு அதில் திருப்தி இல்லை. அதே சமயம் இந்த படத்திற்கு முன்பாக டி.எம். சௌந்தரராஜன் சிவாஜியின் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இதை நினைக்காத இளையராஜா, என்னோடு பாடுங்கள் என்ற பாடலை டி.எம் சௌந்தரராஜனுக்கு பதிலாக அன்று வளர்ந்து வரும் பாடகராக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனை வைத்து பாட வைத்துள்ளார்.

இதனால் டி.எம்.சௌந்திரராஜனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் இந்த படத்தில் வரும் திருத்தேரில் வருகின்ற நிலவோ என்ற பாடலையும் எஸ்.பி.பி பாடியிருந்த நிலையில், எந்தன் பொன்வண்ணமே பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். இந்த படத்தில் இரு பாடல்களை பாடிய எஸ்.பி.பி அன்று வளர்ந்து வரும் பாடகராக இருந்ததால் சிவாஜிக்கு புதிய குரல் கொடுத்தால் அவரது ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்பதால் இளையராஜா இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply