• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடிகாரன் கூட வந்தா இப்படித்தான்... திட்டிய எம்.எஸ்.வி... கோபத்தில் கண்ணதாசன் கொடுத்த ஹிட் பாடல்

சினிமா

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது.

மனித வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர் தான் கண்ணதாசன். காதல், இன்பம், துன்பம், பரிவு, பாசம் இவை அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனது எழுத்தின் மூலம் வடிவம் கொடுத்த கண்ணதாசன், மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை வைத்தே தனது பாடல்களை எழுதியிருப்பார்.

1950 தொடங்கி 70களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல அரிய தத்துவங்களை சொல்லிக்கொடுத்த கண்ணதாசன், நடிகர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முக திறமை கொண்ட முக்கிய பிரபலங்களில் ஒருவர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தனது எழுத்தின் மூலம்  ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

அதேபோல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. அதேபோல் இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒருவர் மீது ஒருவர் கோபப்படுவதும் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், எம்.எஸ்.வி கோபப்பட்டதால் கண்ணதாசன் ஒரு ஹிட் பாடலையே கொடுத்துள்ளார்.

1962-ம் ஆண்டு ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சில் ஓர் ஆலையம். முத்துராமன் தேவிகா இணைந்து நடித்த இந்த படத்தில், நோயால் பாதிக்கப்பட்ட முத்துராமன் தனது மனைவி தேவிகாவிடம் நான் இறந்த பிறகு நீ மருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். அந்த இடத்தில் தேவிகா ஒரு பாடலை பாடுவார். இந்த சுட்சிவேஷனுக்கு பாடல் எழுதுவதற்காக எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் பெங்களூர் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இதில் மதுபழக்கம் இருந்த கண்ணதாசன் முதல் நாள் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். இதனை பொறுத்துக்கொண்ட எம்.எஸ்.வி அடுத்த நாளும் கண்ணதாசன் அதேபோல் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டதால் கோபத்தில் அவரின் அறைக்கு சென்று அவரை யாரைவது கூட்டி வாருங்கள் இல்லை என்றால் நான் இப்போதே ஊருக்கு புறப்படுகிறேன் குடிகாரன் கூட இப்படித்தான் நடக்கும் என்று கூறியுள்ளார். இதன் பிறகு உடனே கண்ணதாசன் அறை கதவு திறந்துள்ளது.

கண்ணதாசன் வெளியே வந்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் எம்.எஸ்.வி சொன்னது கேட்டிருக்குமா என்று அதிர்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் வெளியே வந்த கண்ணதாசன் சொன்னது நீதானா விசு என்று கேட்டுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி அது நான் இல்லை அது வந்து என்று இருக்க சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே இதுதான் பல்லவி போய் மெட்டு போடு வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் எம்.எஸ்.வி மெட்டு போட சொன்னபடியே வந்த கண்ணதாசன் முழு பாடலையும் எழுதி கொடுத்துள்ளார். அப்படி வந்த ஹிட் பாடல் தான் சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே என்ற பாடல். எம்.எஸ்.வி கோபத்தில் கூறி வார்த்தையால் ஒரு ஹிட் பாடல் கொடுத்த கண்ணதாசன் இதேபோல் பல தருணத்தில் இந்த மாதிரியான பாடல்களை கொடுத்துள்ளார்.

urendran Embanath

Leave a Reply