• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீங்கள் நடிப்பது ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்களே? - என்கிற கேள்வி சிவாஜியின் முன் வைக்கப்படும்

சினிமா

நீங்கள் நடிப்பது ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்களே? என்கிற கேள்வி நடிகர் திலகம் சிவாஜியின் முன் வைக்கப்படும் போது அவர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

டிக்ஷனரியை எடுத்துப் பாருங்கள். Acting என்கிற வார்த்தைக்கு ' Exaggeration of expression' என்றும் ஒரு பொருள் போட்டிருப்பார்கள். An Actor is a dramatic performer என்று குறிப்பிடப்பட்டிருக்கும். நடிப்பே ஒரு தோரணைதானே.. நேச்சுரலாக அல்லது அன்நேச்சுரலாக நடிக்கிறான் என்கிறார்கள். அதெப்படிங்க நேச்சுரலாக நடிக்க முடியும்? முகத்தில் அரிதாரம் பூசினாலே அன்நேச்சுரல்தானே... கட்டபொம்மனை எடுத்துக் கொள்ளுங்கள்.. 'கிஸ்தி... வரி... வட்டி...' என்று தோரணையோடு பேசினால்தானே, அது வசனம். அதுதானே நாடகம்!

சிவாஜி கணேசன் என்றெல்லாம் தன் மீது சொல்லப்படும் புகாருக்கு பல்வேறு விளக்கங்கள் தருகிறார் சிவாஜி கணேசன் ('என் சரிதை' நூல்). இந்தச் சம்பவம் பலரும் அறிந்ததுதான். நடிகரும் பத்திரிகையாளருமான 'சோ' பல மேடைகளில் இதைச் சொல்லியிருக்கிறார். ஒரு முறை சோவும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரு படப்பிடிப்பில், தனது வழக்கமான பாணியில் ஒரு காட்சியில் சிவாஜி ஆரவாரமாக நடித்து முடித்தவுடன், அனைவரும் கைத்தட்டி பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், சோ மட்டும் அமைதியாக நின்றிருக்கிறார். இதைக் கவனித்த விட்ட சிவாஜி, சோவை தனியறைக்கு அழைத்துச் சென்று 'ஏன்... நான் நடிச்சது பிடிக்கலையா?" என்று கேட்க, தன் நக்கலான பாணியில் 'ரொம்ப ஓவரா இருந்தது' என்று சோ சொல்லியிருக்கிறார்.

பிறகு ‘'சரி... அதே காட்சியை இப்போது subtle ஆக நடித்துக் காட்டுகிறேன்... பார்!'’ என்று சிவாஜி இயல்பாக நடித்துக் காண்பிக்க, சோ பிரமித்துப் போயிருக்கிறார். கூத்து நாடகங்களில் நடிப்பவர்களின் பொதுவான நடிப்பு இலக்கணம் இதுதான்.

நானும் நீயுமா - 7: குடிகாரன், கோமாளி, கிழவன்… ஏன் சிவாஜி இமேஜ் பற்றி கவலைப்படவில்லை?

தூரத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் பார்வையாளனுக்கும் தெரியும்படி தன் உடல்மொழியை மிகையாக நிகழ்த்திக் காட்டினால்தான் அவர்களுக்குப் புரியும். ஆனால், இதே நாடக நடிகர்கள் சினிமாவிற்குள் வரும் போது அதன் மொழிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள பலரால் இயலவில்லை. கோபமாக நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், அந்த உணர்ச்சியை பார்வையாளர்களுக்கு உணர்த்த, கண்களை மிகையாக உருட்டி, கைகளை ஆவேசமாக உதறி என்று நடிக்க வேண்டியதில்லை. ஏனெனில், சினிமா என்பது கேமராவின் மூலம் துண்டு துண்டாக படமாக்கப்படும் ஒரு விஷயம். ஒரு க்ளோசப் ஷாட்டின் மூலம் இந்த பாவத்தை எளிதில் உணர்த்தி விட முடியும்.

ஆனால், இந்த இரண்டு நடிப்பிற்குமான வித்தியாசம் சிவாஜிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்திற்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.

"சரி... ஓவர் ஆக்டிங் -ன்னு சொல்றாங்களேன்னு சில படங்கள்ல இயல்பா நடிச்சுப் பார்த்தேன். என்னப்பா... சிவாஜி நடிக்கவேயில்லைன்னு கேக்கறாங்க' என்று சொல்லிச் சிரிக்கிறார் சிவாஜி. ('என் சரிதை' நூல்).

Leave a Reply