• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசைஞானியின் பாடல்களே பண்டிகைகளை தாங்கி பிடிக்கின்றன..

சினிமா

தற்போதைய வறட்சியான தமிழ் சினிமா பாடல்களுக்கு நடுவே இசைஞானியின் பாடல்களே பண்டிகைகளை தாங்கி பிடிக்கின்றன..

பொங்கலுக்காக இளையராஜா இசையமைப்பில் உருவான மகாநதி திரைப்படத்தின் தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாடல்தான் பல நிகழ்ச்சிகளின் முன்னோட்ட ரிங்டோனாக இன்றும் உள்ளது. பல டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளின் ப்ரோமோவாக இந்த பாடலின் ஆரம்பமே தேர்வு செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பண்டிகை சூழலுக்கும் இசைஞானியிடம் பாடல்கள் உள்ளன. முக்கியமாக இளையராஜா இசையமைத்த இளமை இதோ இதோ என்ற பாடல் ஒவ்வொரு புதுவருடத்திற்க்கும் அனைவரும் ஆட பாட உபயோகிப்பது எப்படியோ  அதே போல தான் போகி பண்டிகைக்கு இந்த இரு பாடலும் நிச்சயம் நினைவுக்கு வரும்...

தளபதி படத்தின், மார்கழிதான் ஓடிப்போச்சு” காட்டுக்குயிலு மனசுக்குள்ளே என்ற பாடல்கள்..

போகி என்றதும் நம் நினைவுக்கு வரும் பாடல்கள்  இதுவாகத்தான் இருக்கும்.

மார்கழிதான் ஓடிப்போச்சு இந்த பாடல் முழுக்க முழுக்க தாளவாத்திய பாடல். 

மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் தாள சத்தம் தான் இந்த பாடலுக்கான  ஆரம்பம்...'மாமன் ஒரு நா மல்லியப்பு கொடுத்தான்'னு என்ற பாடலில் ஆரம்பிக்கும் இந்த தாள சத்த்தை இருபது வருடங்களுக்கு பிறகு ராஜா இங்கு பயன்படுத்தி இருப்பார்....

போகியின்போது தெருவில் சிறுவர்கள் மெல்லிய ஈர்கிள் குச்சியால் அடிக்கும் மேள சத்தத்தை ஸநேர் ட்ரம்ஸ் என்று சொல்லப்படும் தாள கருவியில் இசைஞானியால் எப்படி கொண்டு வர முடிந்தது என்று வியப்பிலாழ்த்தும் இசை.

முதலில் ஒற்றையாக ஒலித்து போக போக கூட்டு தாளமாக மாற 20 முதல் 29 நொடிகள் வரை குழல் நாட்டியமாடும். அதை தொடர்ந்து ‘ரிம் ஷாட்’ போல ஒரு ‘ஸ்டிக் ப்ளே’ வரும்.குழலின் ஒலி பாடலின் கடைசியிலும் எட்டி பார்க்கும். மொத்தத்தில் ஒரு துள்ளல் பாடல்.

காட்டுக்குயிலு என்ற பாடல் உச்சங்கள் பாலசுப்பிரமணியனும்,கே ஜே ஏசுதாசும் பாடியிருப்பார்கள்.இதில் சுவாரசியம் என்னவெனில் இளையராஜா இரண்டு அல்லது மூன்று இசைக்கருவிகளை மட்டும் உபயோகித்து பின்னிப் பெடலெடுத்திருப்பார்.பாடலுக்கு எல்லோரும் ஆடியதை ஸ்லோமிசணில் வீடியோ ஓடும்.ஒலியும் ஒளியும் அவ்வளவு கச்சிதமாக பொருந்தியிருக்கும்.

இந்த பாடலில் எவருக்கும் அவ்வளவு பெரிய ஒப்பனையில்லை.ரஜினி கூட  ஒப்பனையின்றிதான் ஆடியிருப்பார்  . அப்பாடல் போகிப்பண்டிகையைக் கொண்டாடும் கொண்டாட்டப்பாடலாக வரும்.”போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு” என்றபடி பழையன கழிதலும் புதியன புகுதலுமாக  கொண்டாடும் உற்சாகப்பாடல் அது.

“தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்

அச்சுவெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான்” என  தை மாதத்தை உற்சாகமாக  வரவேற்க்கும் பாடல்.. 

ஒவ்வொரு போகி பொங்கல் நாளன்றும் இப்பாடல்களை  சந்திக்காமல்

நாம் போகியை பொங்கலை கடக்க முடியாது.அற்புதமான வரிகள்.உன்னதமான இசை.அழகான நடிப்பு..

ஆரம்பத்தில் சொன்னபடி தற்போதைய வறட்சியான தமிழ் சினிமா பாடல்களுக்கு நடுவே இசைஞானியின் பாடல்களே பண்டிகைகளை தாங்கி பிடிக்கின்றன..

அது தான் இளையராஜா..

Leave a Reply