• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் கொடுத்த டார்ச்சர்... கடுப்பில் கண்ணதாசன் கொடுத்த பாடல்

சினிமா

இயக்குனர் கொடுத்த டார்ச்சர்... கடுப்பில் கண்ணதாசன் கொடுத்த பாடல் : கமல்ஹாசன் பட சுவாரஸ்யம்

இயக்குனர் தயாரிப்பாளர் இடையே உள்ள ஈகோவை தெரிந்துகொண்ட கண்ணதாசன் ஒரே நேரத்தில் 58 பல்லவிகளை கொடுத்துள்ளார்.

19-ம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் கவியரசர் கண்ணதாசனுக்கு முக்கிய இடம் உண்டு 1950 முதல் 70-களின் இறுதி வரை தனது பாடல்கள் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல் வரிகளில் ஒலிக்க செய்த கண்ணதாசன், தன்னை கோப்பபடுத்திய இயக்குனருக்கு தனது பாடல் மூலம் பதிலடி கொடுத்த சம்பவமும் நடந்துள்ளது.

1960-ம் ஆண்டு ஏவிம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் களத்தூர் கண்ணம்மா. ஜெமினி கணேசன், சாவித்ரி, உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தை பீம் சிங் இயக்கியிருந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். சுதர்சன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏ.வி.எம் நிறுவனத்தின் நிறுவனர் மெய்யப்ப செட்டியார் திரைப்படங்கள் தயாரிப்பை தனது மகன்கள் முருகன், சரவணன், குகன் ஆகியோரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து அவர்கள் தயாரிப்பில் வந்த முதல் படம் இது. இந்த படம் தோல்வியடைந்தால், மெய்யப்பன் மகன்களுக்கு சினிமா தெரியவில்லை என்று சொல்லிவிடுவார்கள் என்பதால், மூவரும் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது தலையீட்டை வளர்த்துக்கொண்டனர்.

இந்த படத்தை இயக்க முதலில் தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் ராவ் ஒப்பந்தமானார். ஆனால் தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகன் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டதால் நான் இயக்குனரா இல்லை இவர் இயக்குனராக என்று கோபப்பட்ட பிரகாஷ் ராவ் அதே கோபத்துடன் வேலை செய்துள்ளார். அப்போ படத்தின் பாடல் எழுத கண்ணதாசன் வந்துள்ளார். சுட்சிவேஷனுக்கு தகுந்தார்போல் கண்ணதாசன் பாடல் கொடுத்துள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர் முருகன் இந்த பாடல் பிடிக்கவில்லை. வேறு பாடல் எழுதுங்கள் என்று சொல்ல கண்ணதாசனும் எழுதி கொடுத்துள்ளார். மீண்டும் அவர் பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு பாடல் கேட்டுள்ளார். இப்படியே பல பல்லவிகளை முருகன் நிராகரித்து ஒரு கட்டத்தில் ஒரு பல்லவியை தேர்வு செய்து இயக்குனரிடம் கொடுக்கிறார். ஆனால் முருகன் மீது கோபத்தில் இருக்கும் இயக்குனர் இந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை. வேறு பாடல் கொடுங்கள் என்று கண்ணதாசனிடம் கேட்க அவரும் வேறு பாடல் கொடுத்துள்ளார். மீண்டும் அதே நிலை தொடர்ந்துள்ளது.

அப்போது இயக்குனர் தயாரிப்பாளர் இடையே உள்ள ஈகோவை தெரிந்துகொண்ட கண்ணதாசன் ஒரே நேரத்தில் 58 பல்லவிகளை எடுத்தி கொடுத்துவிட்டு இதில் எது பிடித்திருக்கிறதோ அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதில் அத்தனை பல்லவிகளும் அற்புதமாக இருந்ததால், பல்லவிகளையே பாடலாக மாற்றியுள்ளனர்.

அப்படி உருவான பாடல் தான் அருகில் வந்தாள் உருகி நின்றாள் அப்பு தந்தாளே என்ற பாடல். சாவித்ரியை பிரிந்தபோது ஜெமினி கணேசன் குடித்துவிட்டு பாடிய பாடல். இந்த படத்தில் இருந்து ஒரு கட்டத்தில் பிரகாஜ்ராவ் விலகியதை தொடர்ந்து பீம் சிங் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி 

Leave a Reply