• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க்ளைமேக்ஸ் திருப்தி இல்லை... தியேட்டரை கொளுத்திய ரசிகர்கள் - எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?

சினிமா

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கடைசி வரை தான் படங்களில் மது புகை போன்ற காட்சிகளை தவிர்த்தவர்.

தமிழக அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி அதில் சிம்மாசனம் அமைந்து அமர்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒரு நாடக நடிகராக இருந்து சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்னாளில், பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அவரது படங்கள் வெளியாகும்போது ரசிகர்களுக்கு அந்த நாள் பண்டிகை நாளாக மாறிவிடும். அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக்காட்சிகள் பெயர்பெற்றவை என்றாலும் கூட மக்களுக்கு தேவையாக பல கருத்துக்கள் அடங்கியிருப்பதும் ஒரு காரணம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கடைசி வரை தான் படங்களில் மது புகை போன்ற காட்சிகளை தவிர்த்தவர்.

இப்படி எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அதே சமயம் அவர் படம் ஓடிய திரையரங்கை அவரது ரசிகர்களே தீயிட்டு கொளுத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது. 1936-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர் தொடர்ந்து 10 வருட இடைவெளிக்கு பிறகு நாயகனாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் மதுரை வீரன்.

மதுரை வீரனின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை யோகானந்த் இயக்கியிருந்த நிலையில், எம்.ஜி.ஆர், பத்மினி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு இறந்துவிடுவார். இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று எண்ணிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு முதல் நாள் முதல் காட்சி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

மதுரை வீரன் தெய்வம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வெளியான இந்த படத்தில் கடைசியில் எம்.ஜி.ஆர் இறந்துவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பரமக்குடி பகுதியில் எம்.ஜி.ஆர் ரசிகர்களே தியேட்டரை எரித்துவிட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் எழுந்துள்ளது. பதற்றடத்தை குறைக்க படத்தில் இருந்து அந்த காட்சியை நீக்க படக்குழுவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இது வரலாற்று படம் அவ்வாறு செய்ய முடியாது என்பதால் படக்குழு என்ன செய்வது என்று யோசித்தபோது நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி படத்தின் இறுதியில் அவர் தோன்றி எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கு செல்கிறார் தெய்வமாய் இருந்து நம்மை பாதுகாக்க என்று கூறியுள்ளார். அதன்பின் பதற்றம் தனிந்து படம் திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் திரையில் கூட இறந்துவிட கூடாது என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இன்றும் உள்ளது.
 

Leave a Reply