• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனா? நானா? பாத்துக்கலாம்... மல்லுக்கு நின்ன சாவித்ரி: இறுதியில் என்ன நடந்தது?

சினிமா

இந்தியா சீனா போர் நடந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பிய கவிஞர் கண்ணதாசன் ரத்த திலகம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சாவித்ரிக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அப்போதைய தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

1962-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய அரசு மீதும், இந்திய ராணுவம் மீதும் மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தது. அந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பிய கவிஞர் கண்ணதாசன் ரத்த திலகம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இந்த படத்தில், சிவாஜி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, சாவித்ரிக்கு எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மொத்த டெட்டையும் எம்.ஜி.ஆர் படத்திற்கு சாவித்ரி கொடுத்துவிட்டார். இதனிடையே ரத்த திலகம் படம் குறித்து சாவித்ரியிடம் கண்ணதாசனின் உதவியாளர் வீரய்யா போய் பேசியுள்ளார்.

மொத்த டேட்டையும் எம்.ஜி.ஆர் படத்திற்கு கொடுத்துவிட்டதால், அந்த படம் முடிந்தால் தான் ரத்த திலகம் படத்திற்கு டேட் கொடுக்க முடியும் என்று சொல்லிவிடுகிறார். இதை கண்ணதாசனிடம் சொல்ல, கண்ணதாசன் உடனடியாக சாவித்ரிக்கு போன் செய்ய சொல்லியுள்ளார். இதன்பிறகு வீரய்யா சாவித்ரி வீட்டுக்கு கால் பண்ண, போனை எடுத்த சாவித்ரியின் உதவியாளர் அவர் கூட்டி வருகிறேன் என்று சொல்லி லைனில் இருக்குமாறு கூறியுள்ளார்.

அதன்பிறகு சாவித்ரி வந்து போனை எடுத்தது தெரியாமல் கண்ணதாசன் அவரை கண்டபடி திட்டியுள்ளார். அவர் டேட் கொடுக்கலனா என்ன செய்யிறேன் பாரு... ஃபிலிம கொளுத்திடுவேன் என்று கண்டபடி திட்டியுள்ளார். இதை கேட்ட, சாவித்ரி ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட கண்ணதாசன் வீரய்யாவிடம் சொல்லி திரும்பவும் போன் செய்ய சொல்லி இருக்கிறார்.

இந்த முறை வீரய்யா போன் செய்யும்போது பேசிய சாவித்ரி, கவிஞர் பேசியதை நான் கேட்டேன். அவர் ஃபிலிம் ரோல் கொளுத்த வேண்டும் என்றால் செய்யட்டும். அவர் பேசியது சரியில்லை. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் அடுத்து டேட் தருவேன் என்று கூறியுள்ளார்.இதனால் பிரச்சனை பெரிதாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணதாசன் யோசிக்க, இந்த பிரச்சனை சிவாஜியின் தம்பி சண்முகத்திடம் செல்கிறது. நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் நான் முடித்து தருகிறேன் என்று சண்முகம் கவிஞரிடம் கூறியுள்ளார்.

அதன்பிறகு சாவித்ரி ஷூட்டிங் செல்லும் ஸ்டூடியோக்களுக்கு சென்று அவரை சந்திக்காமல் அவர் கண்ணில் படுவது போன்று அங்கும் இங்குமாக அலைந்துள்ளார் வீரய்யா. ஒரு வாரம் இதை கவனித்த சாவித்ரி, எதற்காக இப்படி அலையுறீங்க, நான் தான் முடியாது என்று சொல்லிவிட்டேனே இனிமேல் இப்படி பண்ணாதீங்க என்று சொல்லி அனுப்பியுள்ளார். ஆனாலும் வீரய்யா அடுத்த வாரம் அதையே செய்துள்ளார்.

இப்போது மனமிறங்கி வந்த சாவித்ரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, இந்த படம் போர் முடிவதற்குள் வெளியாக வேண்டும் அப்போது தான் சரியாக இருக்கும் மக்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டியது போன்று இருக்கும். தாமதமாக வெளியானால் சரியாக இருக்காது. படத்தை முடக்கிவிட்டாலும் கவிஞர் கடனாளியாகிவிடுவார் என்று எடுத்து சொல்ல சாவித்ரி டேட் கொடுக்க சம்மதிக்கிறார். அதற்கு 2 நிபந்தனைகளை கூறுகிறார்.

இந்த படத்திற்கான முழு சம்பளமும் ஒரு பெமெண்டடில் வர வேண்டும். அதன்பிறகு படம் தொடர்பான நீங்கள் மட்டும் தான் என்னை தொடர்புகொள்ள வேண்டும். மற்ற யாரும் என்னிடம் பேசக்கூடாது என்று சொல்ல, சரி என்று சொல்லிவிட்ட வீரய்யா கண்ணதாசனிடம் வந்து சொல்கிறார். அதன்பிறகு சாவித்ரி சம்பளத்திற்காக அவருக்கு செக் கொடுக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இரத்த திலகம் படம் பெரிய வெற்றி பெற்ற க்ளாசிக் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply