• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்த ஒரு நாடகத்தில் மட்டும் நடித்து கிடைத்த வசூலின் இன்றைய மதிப்பு 133 கோடி.. அதை சிவாஜி என்ன செய்தார் தெரியுமா..?

சினிமா

நடிகர் சிவாஜி கணேசன், நடிகர் ஆவதற்கு முன், நாடக கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்தவர். அவர் வசனம் பேசி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தை இப்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் நடித்துக் காட்டி கொண்டிருக்கின்றனர். இன்னும் எம்குல பெண்களுக்கு மஞ்சளரைத்து பணிபுரிந்தாயா, நீ மாமனா, மச்சானா என்ற வசனங்கள் நாடக மேடைகளில் உயிர்ப்போடு ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்க துவங்கிய போது, அதற்கான அலங்கார ராஜ உடைகள், ஆபரணங்கள், மேடை அலங்காரம் அப்போதே 50 ஆயிரம் வரை செலவு செய்து இருக்கிறார் சிவாஜி. அது இப்போதைய மதிப்பில், ரூ. 12 லட்சமாக உள்ளது.

நூறு முறைக்கு மேல் பல பஇடங்களில் நாடகமாக கட்டபொம்மன் நடத்திய நிலையில்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. படமாக வந்த பிறகும், மீண்டும் சிவாஜி கணேசனை பலரும் விரும்பி அழைக்க அதற்கு பின்பும் 9 முறை இதே நாடகத்தை போட்டு பலபேர் முன்னிலையில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அப்போதும் பார்வையாளர்கள் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கின்றனர்.

சிவாஜி கணேசன் ஒருமுறை, திருநெல்வேலியில் இருந்து காரில் சென்ற போது கயத்தாறு பகுதிக்கு கார் வந்திருக்கிறது. அப்போது ஒருவித மன உணர்ச்சியால் அவர் தவித்திருக்கிறார். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போடப்பட்ட இடம் என்பது கவனிக்கத்தக்கது. அப்போதே சக்தி நாடக சபா குழுவினரை அழைத்து, மிக உடனடியாக கட்டபொம்மன் நாடகத்தை எழுதுங்கள் என்று கூறி, அதன்பிறகுதான் அந்த நாடகம் மூலம் மிக பிரபலமாகி இருக்கிறார்.

ஷூட்டிங் பிஸியிலும் இந்த நாடகத்தில் நடிப்பதை சிவாஜி ஒருபோதும் கைவிட்டது இல்லை. கட்டபொம்மன் நாடகங்களை 112 முறை நடத்திய வகையில், சிவாஜி கணேசனுக்கு ரூ. 32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இன்றைய மதிப்பில் அது 133 கோடி, 88 லட்சம் ரூபாய். அந்த பணத்தை எல்லாம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நன்கொடை என வழங்கி விட்டார் சிவாஜி என, நேர்காணல் ஒன்றில் நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Sundar Rajan

Leave a Reply