• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனது இறுதிக் காலத்தில் வாட்டர் லூ போரில் தோற்று விட்டார் மாவீரர் நெப்போலியன்.

சினிமா

ஆள் ரொம்பக் குள்ளம், தன்னை மற்றவர் முன்பு கம்பீரமாகக் காட்டிக் கொள்ள எப்போதும் குதிரை மேலேயே அமர்ந்து இருந்ததால் மூல வியாதி வேறு வந்து இருந்தது.
நெப்போலியனை பழி வாங்க தனித் தீவிற்கு அனுப்பினார்கள்.
அங்கு இருக்கும் ஆங்கிலேயத் தளபதிகளுக்கு #நெப்போலியன் எப்படி இருப்பார்.?! என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தது .
ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கற்பனை பண்ணி வைத்து இருந்தார்கள் அவர்கள் எல்லாம்.
ஆனால் நெப்போலியன் தோற்றம் அதற்கு நேர்மாற இருந்தது..... 
குள்ளமான உருவம், கை கால்களில், நாள்பட்ட தோல் வியாதிகள். மூல வியாதி உடன் மெதுவாக காலை அகற்றி வைத்து வருபவரைக் கண்டதும் அவர்களுக்கு சப்பென்று போய் விட்டது.
இவரா மாவீரன்.?! 
இவரா நெப்போலியன்.?! என்று அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்.
அவருக்கு விளையாட்டு காட்ட முடிவு செய்தார்கள்.
ஒரு பெரிய மேஜையில் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.
(நெப்போலியன் அமரும் நாற்காலிக்கு கொஞ்சம் தள்ளி வெறும் சத்தம் மட்டும் வரும் டம்மி வெடிகுண்டு ஒன்று புதைக்கப்பட்டது)
விருந்து தொடங்கி எல்லாரும் ஒயினை எடுக்கும்போது, முன்பே திட்டமிட்டப்படி சத்தத்துடன் அங்கே வெடிகுண்டு வெடித்தது.
இந்தத் திட்டதை தீட்டிய தளபதிகளே, அந்த டம்மி குண்டு வெடித்த சத்தத்தைக் கேட்டு தன்னிச்சையாக தங்கள் கைகளில் இருக்கும் மது கோப்பைகளை கீழே தவற விட்டு விட்டார்கள்.
மறுபுறம் பார்த்தால் எந்தச் சலனமும் இல்லாமல், எந்த பதற்றமும் இல்லாமல் நெப்போலியன் ஒயினை குடித்துக் கொண்டு இருந்தார்.
இவர்களுக்கோ ஆச்சரியம். அவரிடமே கேட்டு விட்டார்கள்.
எப்படி நாம் இருந்த அறையில் வெடிகுண்டு வெடித்த போதும் நீ பதறவே இல்லை.?!
அதற்கு அவர் சொன்ன பதில் தான் "சரித்திரத்தில் சாகாவரம்" பெற்றது.

"நீங்கள் எப்போது எனது கைகளில் ஒயின் கிளாஸைக் கொடுத்தீர்களோ, அதன் பிறகு வேறு சிந்தனை இல்லை.
அந்த நிமிடத்தில் இருந்து என் ஒரே லட்சியம் அந்த கிளாஸில் உள்ள ஒயினைக் குடிப்பது மட்டும்தான்.
அது முடியும் வரை உலகத்தில் நடக்கும் வேறு எந்த விஷயத்திலும் எனக்கு அக்கறை கிடையாது என்றார் #நெப்போலியன்"
அவர் சொன்னதைக் கேட்டு விட்டு அந்த அதிகாரிகள் எல்லாம் அசந்து போய் விட்டார்கள்.
நீதி:  புத்திசாலிகளின் எண்ணம், செயல், திட்டம் எல்லாம் எடுத்த காரியத்தை எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பது பற்றியே சிந்தனையாக இருக்கும். கருமமே கண்ணாக இருப்பார்கள்....
அப்படி இருப்பவர்களைத்தான் வெற்றி தேவதையும் கரம் பற்றுவாள் ஆவலோடு..!

Leave a Reply