• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் வரிகளில் தவறு என்றால் பாரதியாரே தவறுதான்... கடைசி வரை வரிகளை மாற்றாத வாலி

சினிமா

பல நடிகர்களை தனது பாடல்கள் மூலம் முன்னணி நடிகர்களாக மாற்றியுள்ள வாலி, 1950-களில் தொடங்கி 2014-வரை தனது எழுத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வயதானாலும் வாலிப கவிஞர் என்று பெயரெடுத்தவர் கவிஞர் வாலி. க்ளாசிக் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக எம்.ஸ.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் வாலி. எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய நடிகர் சூர்யா வரை பல நடிகர்களை தனது பாடல்கள் மூலம் முன்னணி நடிகர்களாக மாற்றியுள்ள வாலி, 1950-களில் தொடங்கி 2014-வரை தனது எழுத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான கவிஞராக இருந்த வாலி, 1964-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான தெய்வத்தாய் படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி அசோகன், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘’ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை என்ற பாடலை வாலி எழுதியிருந்தார். இந்த பாடல் அப்போது பெரிய ஹிட் பாடலாக அமைந்து.

இந்த பாடலை கவிஞர் வாலி எழுதும்போது, சரணத்தில் அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை என்று எழுதியிருந்தார். இந்த வரிகளில் பிழை இருப்பதாக நடிகர் சீதாராமன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனிடம் கூறியுள்ளார். எந்த மலரிலும் ஒளி இருப்பதில்லை. ஆனால் கவிஞரே கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரின் ஒளியில்லை என்று எழுதியிருப்பதாக கூறியிருந்தார்.

இந்த பேச்சு வாலியின் காதுக்கு செல்ல, அவரோ நான் எழுதியது தவறு என்றால் பாரதியாரும் தவறுதான் என்று கூறியுள்ளார். பாரதியார் கவிதையில் சோலை மலரொளியோ உந்தன் சுந்தர புன்னகையோ என்று எழுதியதை குறிப்பிட்டுள்ளார். இதில் மலரில் ஒளி என்று கூறுவது வெளிச்சத்தை அல்ல அதன் அழகைத்தான் என்று தயாரிப்பாளர் வீரப்பனுக்கு வாலி விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம் கொடுத்ததை அந்த வரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய வாலி, தான் எழுதிய பாடலை அப்படியே வைத்து பதிவு செய்ய கூறியுள்ளார். அந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வாலிக்கு புகழ் சேர்த்தது.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply