• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒட்டாவாவில் கடும் பனிப்பொழிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா

ஒட்டாவாவில் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வார இறுதி நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் சுமார் 25 சென்றி மீற்றர் அளவில் பனிப்பொழிவு நிலைமையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் பனிப்புயல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 3 முதல் 5 சென்றிமீற்றர் என்ற அடிப்படையில் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக பெருந்தெருக்கள், பாதைகள் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுவது சிரமமாக அமையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply