• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு

இலங்கை

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு திவாலானமைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த வாரம் குழுவில் ஆஜராகுமாறு நந்தலால் வீரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் நிதி திவால் நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சாகர காரியவசம் தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply