• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் அதிரடி நீக்கம்

சினிமா

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பலர் 'அன்னபூரணி' படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து, இந்து மதத்தையும் பிராமண சமூகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை இதனால் ஏற்ப்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply