• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங் - நடிகையிடம் சில்மிஷம் செய்த ஜப்பான் இளைஞருக்கு பளார்!

சினிமா

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகைகள் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நடிகர் எம்.என். நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படம் 1973ஆம் ஆண்டு வெற்றிகரமாக வெளியானது.

இந்தப் படத்தில் நடிகைகள் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நடிகர் எம்.என். நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இவர்கள் தவிர தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத்தும் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை சந்திரகலாவிடம் ஜப்பானிய ரசிகர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்டதும் சம்பந்தப்பட்ட ரசிகருக்கு எம்.ஜி.ஆர். ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார்.

அவ்வளவுதான் சம்பந்தப்பட்ட ரசிகர் கிரங்கி 10 சுற்றுகள் வரை சுற்றி விழுந்தாராம். இதனை புலியூர் சரோஜா, சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டார்.

உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. இந்தப் படம் 200 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

படத்தில், பச்சைக்கிளி முத்துச்சரம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற பாடல்கள் மெகா ஹிட் ஆகி பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.

இன்றும் இந்தப் பாடல்கள் கிராமப்புறங்களில் திருமணம் போன்ற சுப தினங்களில் ஒலிப்பரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply