• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம்

சினிமா

தமி­ழர்கள் தங்கள் பண்­பாட்டை மற­வாமல் தங்­களின் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் 1974ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் உரு­வாக்­கப்­பட்­டதே உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம்.

ஒரு நாட்டின் கலா­சார பண்­பாடு என்­பது இனம், மதம், மொழி என்ற ரீதியில் சமூ­கத்­துக்கு சமூகம் வேறு­பட்டு காணப்­ப­டு­கின்­றது. எனினும் அதனை அந்த சமூகம் சார்ந்தோர் நாடு கடந்தாலும் விட்­டு­வி­டு­வ­தில்லை. அந்­த­வ­கையில் புலம்­பெ­யர்ந்து சென்றும் தம் கலா­சார பண்­பாட்­டினை கட்­டி­க்காக்கும் வித­மாக உலகத் தமிழ்ப் பண்­பாட்டு இயக்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

அந்­த­ வ­கையில் இவ்­வ­ருடம் பொன்­விழா காணும் உலகத் தமிழப் பண்­பாட்டு இயக்­கத்தின் துணை முதன்மைத் தலைவரும் தற்போது இலங்கையில் தங்கியிருந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திவருகின்றவருமான கனடா வாழ் சிவா கண­ப­திப்­பிள்ளை அவர்கள் இயக்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் பகிர்ந்து கொண்ட விட­யங்கள் தொகுப்­பாக பின்­வ­ரு­மாறு,
தமி­ழர்கள் தங்கள் பண்­பாட்டை மற­வாமல் அதனை தங்­களின் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் உரு­வாக்­கப்­பட்­டதே உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம். இது 1974ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன் முதல் அகிலத் தலைவர் வீரப்பன்.

1994ஆம் ஆண்டு நான் கனடா சென்­ற­போது உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்­கத்தின் கனடா கிளைக்கு மறைந்த அமரர் செம்மல் செல்­லையா தலை­வ­ராக இருந்தார்.

இதன் தொடர்ச்­சி­யாக கடந்த 2006ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் திகதி கனடா சட்­டத்­திற்கு இணங்க அங்கு பதிவு செய்­யப்­பட்­டது. இப்­ப­தி­வா­னது சட்­ட­பூர்­வ­மாக ஆண்­டு­தோறும் புதுப்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த இயக்­க­மா­னது கனடா, சுவீடன், பிரான்ஸ், ஜெர்­மனி, தென் ஆபி­ரிக்கா, லண்டன் இவ்­வாறு பல நாடு­க­ளிலும் உள்ள இனம், மொழி, மதம், அர­சியல் என்­ப­னவற்றை கடந்து தமி­ழர்­களின் பண்பா­டு­களை விரும்­பக்­கூ­டிய பல்­லா­யி­ரத்­துக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­க­ளுடன் 50ஆவது ஆண்­டினை நோக்கி பய­ணித்துக்கொண்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம் அனைத்­து­லக மாநாட்டினை நடத்­து­வ­துடன் அதற்கு முன்­ன­தாக பேரவை கூட்­டத்­தி­னையும் நடத்தி வரு­கின்­றது.

இம்­மா­நாட்டில் நம் பண்­பாட்­டினை புதி­ய­வர்­களிடம் எவ்­வாறு எடுத்துச் செல்­வது. நம் பிள்­ளைகள், அவர்­களின் பிள்­ளைகள் இதனை பின்­பற்­று­வ­தற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழி­மு­றைகள் பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தோடு இளம் சந்­த­தி­யினர் அதனை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­காக திருக்­குறள் போட்­டிகள், பண்­பாடு தொடர்­பான போட்­டிகள் என பல போட்­டி­களை நடத்தி அவர்­களை வழி­ந­டத்­து­கின்றோம். அத்­துடன் அவ்­வப்­போது பண்­பாடு தொடர்­பான கருத்­த­ரங்­கு­க­ளையும் நடத்தி வரு­கின்றோம். குறிப்­பாக வெளி­நாட்டில் புலம்­பெ­யர்ந்து வாழும் நம்­ம­வர்கள் பண்­பாட்­டினை மறந்­து­வி­டக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக இருக்­கின்றோம்.

அந்­த­வ­கையில் கடந்த 2017ஆம் ஆண்டு எமது உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்­கத்தின் 13ஆவது அனைத்­து­லக மாநாடும் பேரவை கூட்­டமும் யாழ்ப்­பா­ண பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் அகிலத் தலைவர் கனடா வாழ் வினாசித்தம்பி துரை­ராஜா, செய­லாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணே­ச­லிங்கம் ஆகியோர் தலை­மையில் இடம்­பெற்­றது.

சினி­மாத்­து­றையை சார்ந்­த­வர்­களை அழைத்து வந்­தால்தான் மக்கள் வரு­வார்கள் என்ற எண்­ணக்­க­ருவை மாற்றி எங்கள் இயக்­கத்தின் மாநாடு மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் கூட்­டத்­துடன் தமிழ் அறிஞர்களையும் இலக்கியவாதிகளையும் முன்னிறுத்தி நடை­பெ­று­கின்­றமை மகிழ்ச்சி அளிக்­கின்­றது.

2017ஆம் ஆண்­டுக்கு பின்னர் 2019ஆம் ஆண்டில் சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­பட்ட கொரோனா பரவல் கார­ண­மா­கவும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மா­கவும் கடந்த ஆண்­டு­களில் உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்­கத்தின் அகில உலக மாநா­ட்டினை நடத்த முடி­யாமல் போனது. எனினும் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மற்றும் செப்­டெம்பர் முதலாம் திக­தி­களில் அமெ­ரிக்­காவின் கலி­போ­ர்னியா மாகா­ணத்தில் எமது உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்­கத்தின் 50ஆவது பொன்­விழா மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநா­ட்டுக்கு முன்­ன­தாக பேரவைக்கூட்­டமும் நடை­பெ­றவுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இம்­மா­நாட்­டிற்கு அமெ­ரிக்க கிளை தலைவர் சட்­டத்­த­ரணி மார்­கண்டு விக்னேஸ்­வ­ரன திட்ட அமைப்­பா­ள­ராக செயற்­பட்­டு­ வ­ரு­வ­துடன் இவ­ருடன் செயற்­குழு செய­லாளர் நடா ராஜ்­குமார், ஊடகத்துறைப் பொறுப்பானர் லோகேந்­தி­ர­லிங்கம் ஆகி­யோரும் இணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.

கொரோனா கார­ண­மாக நாங்கள் இயங்­காது இருந்த காலப்­ப­கு­தியில் எம் இயக்­கத்­துடன் தொடர்­பற்ற சிலர் எம் இயக்­கத்தின் பெயரை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்­டனர். எனினும் மக்கள் அதன் உண்­மைத்­தன்மை என்ன என்­பதை ஆராய்ந்து அறிந்து விழிப்­புடன் செயற்­ப­டு­வது நன்று. எமக்கு சர்­வ­தேச ரீதி­யாக பல நாடு­க­ளிலும் கிளைகள் உள்­ளன. அவை அனைத்­துமே சட்­ட­பூர்­வ­மாக பதிவு செய்­யப்­பட்­டவை. எனவே மக்கள் வீணான வத­ந்தி­களை நம்ப வேண்டாம்.

கலா­சாரம் மற்றும் பண்­பாடு

எம் ­மக்­களின் கலா­சார பண்­பா­டுகள் குறித்து கவ­லை­ய­டையத் தேவை­யில்லை. முன்­னரை விட தமி­ழர்­களின் பண்­பாட்டு கலை­களை பிள்­ளைகள் விரும்பி பின்­பற்­று­கின்­றனர். போட்­டி­களில் பங்­கு­பற்றி தங்கள் திற­மை­களை வெளிக்­காட்டி வெற்றிகளை பெறுகின்றனர். இந்த நிலை தொடர வேண்டும். அதற்கானதொரு முயற்சியே எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உருவாக்கம்.

நாம் நமது பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதுடன் அதனை மற்றவர்களிடம் எடுத்துச் சென்று அதனை கௌரவப்படுத்த வேண்டும்.

ஆக இவ்வருடம் பொன் விழா காணும் எமது இயக்கத்தின் மாநாட்டினை அறிவிப்பதோடு எம்மக்களுக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் 2024ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி: இலங்கை ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் கஜன் அவர்கட்கு
 

Leave a Reply