• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடலின் சூழ்நிலை...

சினிமா

அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு தாய் நாடு திரும்பிய தன் உறவினரான காஞ்சனாவை வரவேற்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது .....மேற்கத்திய இசையோடு அனைவரும் நடனமாடுவார்கள் ,ஒருவேளை காஞ்சனா இதை தான் எதிர்பார்ப்பாரோ என்ற எண்ணத்தில் .....ஆனால் காஞ்சனாவோ மிகவும் எளிமையாக தமிழ்நாட்டின் பாரம்பரியத்துடன் அழகான புடவையில் வந்து அனைவரையும் ஆச்சரியபட வைப்பார்.. அது மட்டும் அல்ல ....இந்திய பண்பாட்டுடன் அனைவருக்கும் ஒரு வணக்கத்துடன் ஒரு அருமையான ஆலாபனையுடன் ஒரு பாடலை பாடுவார்.
அந்த பாடல் தான் "வணக்கம் பல முறை சொன்னேன்" ........ படம் : "அவன் ஒரு சரித்திரம்".
இப்பாடலின் சிறப்பு : 
சுசீலா பாடும் வரிகள் மத்யம மற்றும் மந்தர ஸ்தாயியில் அமைந்திருக்கும் 
பின்னர் டி.எம்.எஸ். பாடும் வரிகள் மேல் ஸ்தாயியில் ...... கம்பீரத்திற்கு பெயர் போனவர் அல்லவா அவர்! மேலும் பாடுவது நடிகர் திலகம் .....எனவே ஒரு பெருமிதத்தோடு பாடுவார்.. !
வணக்கம் பலமுறை சொன்னேன் 
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே...
புதிய காஞ்சனாவை பார்த்ததால் நடிகர் திலகம் ஒரு வியப்போடும் மிக்க மகிழ்ச்சியோடும் பாடுவார். 
பாடலின் துவக்கத்திலேயே இது ஆபோகி தான் தெளிவாக தெரியும்... அதாவது பல்லவியிலேயே ஆபோகியின் எல்லா ஸ்வரங்களும் வரும் .
வணக்கம் பலமுறை சொன்னேன் 
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே 
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை 
இன்ப தென்னாட்டின் வழி காக்கும் மென்மை 
கவிஞர் கண்ணதாசன் முத்து முத்தான வரிகளின் மூலம் தன் முத்திரையை பதித்திருப்பார்!
பி.சுசீலாவின் குரலில் ஒரு நளினமும் டி.எம்.எஸ் ஸின் கம்பீரமும் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கும் ! 
நடிகர் திலகத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை! ஆச்சரியம், சந்தோஷம், கம்பீரம், மிடுக்கு இவை அனைத்தும் கொண்ட ஒரு தோற்றத்தை தருவார். 
இந்த ராகத்தை நம் நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை போற்றும் தருணத்திலும் உபயோகப்படுத்தலாம் என்று செய்து காட்டிய எம்.எஸ் .வி ஒரு மகான்!

SV ரமணி அவர்கள்.
நம் நாட்டு பெண்களின் பண்பை  மிக அழகாக கவியரசர் சித்தரித்திருக்கிறார். மன்னர் மதி மயங்கும் இசையை வடித்திருக்கிறார். ஆபோகி ராகத்தில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் மன்னர் என்றால் அது மிகையாகாது!

Viji

Leave a Reply