• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தைகளுக்கு  அவசிய பொருட்களை அன்பளிப்புச் செய்த  கில்மிஷா

இலங்கை

கைதடி அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும்   குழந்தைகளுக்கு  அவசிய பொருட்களை அன்பளிப்புச் செய்த  'ஸரிகமப' இசைப்போட்டியின்   வெற்றியாளர் கில்மிஷா 

இந்தியாவின் zee தமிழ் ஸரிகமப போட்டியின்  வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் அரியாலை ஸ்ரீகலைமகள் மக்களால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

இவ் வரவேற்பு நிகழ்வுகளில்  கில்மிஷா உதயசீலன் அவர்களது அபிமானிகளான  பல  அனுசரணையாளர்கள் தமது விருப்பில் பல நிகழ்வுகளை நடத்தி ஒத்துழைத்தனர். இதனால் செலவுகள் மீதமாகியதால் மிகுதிப் பணத்தை கில்மிஷா உதயசீலன் அவர்களிடம் ஏற்பாட்டுக்குழுவினர் கையளித்துள்ளனர்.

இம் மிகுதிப் பணத்தில் கைதடி அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வேண்டிய அவசிய பொருட்களை கில்மிஷா உதயசீலன் அவர்கள் அன்பளிப்புச் செய்ய விரும்பி அவற்றை செவ்வாய்க்கிழமை  (02.01.2024) தமது கரங்களால் வழங்கிவைத்துள்ளார்.

கில்மிஷா உதயசீலன் அவர்களது இவ் முன் மாதிரியான செயலுக்கு குறித்த அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்ல பொறுப்பதிகாரி நன்றி தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.
 

Leave a Reply