• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய்க்கு பதிலாக சூப்பர் ஹிட் படத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்

சினிமா

விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் டார்க் காமெடி படம் சூது கவ்வும். இதில் அசோக் செல்வன் , சஞ்சிதா, செட்டி கருணாகரன் போன்றோர் நடித்திருந்தனர். நலன் குமாரசுவாமி இயக்கிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் , சூது கவ்வும் – 2 நாடும் நாட்டு மக்களும் திரைப்படம் தயாராகி வருகிறது. அர்ஜீன் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிக்கிறார். இதில் கருணாகரன் இவரோடு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் புது அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ராதாதவி படத்தில் இணைந்துள்ளார் என்பதை போஸ்;டர் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
 

Leave a Reply