• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வித்தியாசமான முறையில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

கனடா

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் புத்தாண்டை வித்தியாசமான முறையில் வரவேற்றுள்ளனர்.

மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சாரமொன்றின் அடிப்படையில் புத்தாண்டை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர்.

பனிக்கரடி மூழ்குதல் ( polar bear plunge) என அழைக்கப்படும் கடும் குளிர்ந்த நீரில் நீந்தும் புத்தாண்டை வரவேற்கும் மரபு கனடாவில் காணப்படுகின்றது.

இந்த புத்தாண்டு காலப் பகுதியிலும் பெரும் எண்ணிக்கையிலானர்கள்; குளிர்ந்த நீரில் மூழ்கி புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

நத்தார் புத்தாண்டு காலத்தில் கனடாவில் கடுமையான குளிர் நீடிக்கும் நிலையில், பனிக்கரடி மூழ்குதல் என்னும் நீர் விளையாட்டு ஊடாக கனடியர்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

கனடாவின் பல்வேறு மாகாணங்களில் இந்த பனிக்கரடி மூழ்குதல் அல்லது குளிர்ந்த நீரில் மூழ்கி நீந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கனடாவின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் இவ்வாறு மக்கள் குளிர்ந்த நீரில் மூழ்கி புத்தாண்டை வரவேற்றமை வினோதமான ஓர் செயற்படாக காணப்பட்டது. 
 

Leave a Reply