• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்தும் இசைஞானி இளையராஜாவின் இசையும்..

சினிமா

இசைஞானிக்கும் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கும் ஒரு இனம் புரியாத பற்றுதல் உள்ளது.

நேற்று 81 வயதிலும் அவ்வளவு கூட்டத்திலும் அவரின் உடலை வந்து இசைஞானி வந்து பார்த்தது அனைவருக்கும் ஆச்சரியமூட்டியது..

சமூக வலைத்தளத்தில் பூராவும் அவர் பேசியதை காண்பித்து பின்னணியில் இசைஞானியின் இசையை ஒலிக்கச் செய்தனர். அதுவும் 88 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இறுதியில் அவர் போட்ட.. "இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்"...என்ற பாடல் அனைவரையும் ஓரே யடியாக உருக்கிவிட்டது என்பது தான் உண்மை. இதுவும் 'அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே" பாடலும் எல்லோரையும் ஒரு வழியாக்கிவிட்டது.

விஜயகாந்த் படத்திற்கு எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருந்தாலும் அவரின் நிஜவாழ்விற்கு ஏற்றபடி இசையமைத்தது இசைஞானி மட்டும் தான்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும், அவர் உயிரோடு இருக்கும் போது அவரை கிண்டலும்,கேலியும் செய்தவர்கள் உட்பட அனைவரையும் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி அவரின் உண்மையான முகத்தை உலகிற்கு அறியச் செய்ததில் பெரும்பங்கு இசைஞானியின் இசைக்கு உள்ளது..

சத்ரியன்,கேப்டன் பிரபாகரன்,பரதன் படத்தின் உத்வேக இசையாகட்டும்..சின்ன கவுண்டரின் கிராமிய இசையாகட்டும் ,ஏழை ஜாதி படத்தின் இந்த வீடு நமக்கு சொந்தமில்லை பாடலாகட்டும்..அப்படியே விஜயகாந்தின் உண்மையான கேரக்டருக்கு போடப்பட்ட பாடல்/ இசையாகத்தான் இத்தனை காலம் இருந்து இருக்கிறது என்று எல்லோருக்கும் உணர்த்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது..

Sampatth Kumar

Leave a Reply