• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் உயரிய அங்கீகாரத்தை பெறும் இந்திய தொழிலதிபர்

கனடா

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான 'Order of Canada' பதவியை இந்திய தொழிலதிபர் ஒருவர் பெறுகிறார். இந்தியாவில் பிறந்த பிர்தௌஸ் கராஸ் (Firdaus Kharas) என்ற தொழிலதிபர் கனடா நாட்டின் உயரிய பதவியான 'ஆர்டர் ஆஃப் கனடா' அதிகாரி பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  
இவருக்கு, மனிதநேயத்தை மையமாக வைத்து ஊடக செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்தை விதைத்ததற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான 'Order of Canada', மிக சிறப்பாகவும், நீடிக்க கூடிய பங்களிப்புகளை ஆற்றியவர்களுக்காகவும் வழங்கக்கூடியது.

கனடா நாட்டின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், உயர்மட்ட அதிகார குழுவுக்கு 15 அதிகாரிகள், ஒரு கௌரவ அதிகாரி, 59 உறுப்பினர்களை நியமனம் செய்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக பிர்தௌஸ் கராஸ் கூறுகையில், "கனடா நாட்டின் இந்த அங்கீகாரத்தை பெறுவதில் நெகிழ்ச்சியடைகிறேன். கனடாவில் குடியேறிய எனக்கு இந்த பதவி அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.

பார்ஸி சமூகம் சாதிக்க கூடியதாகா உள்ளதால், இன்னும் நிறைவளிக்க கூடியதாக உள்ளது" என்றார். பிர்தௌஸ் கராஸ் ஒரு அனிமேஷன் மற்றும் படங்கள் சார்ந்த தயாரிப்பாளர் ஆவார்.

இவரது படைப்புகள் இந்தியா உள்பட 198 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 125 -க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். 
 

Leave a Reply