• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் அளவில் பதிவு

பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் நேற்று நள்ளிரவு 10.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

ஏற்கனவே நேற்று மதியம் இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply