• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

சினிமா

நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இடநெருக்கடி காரணமாக விஜயகாந்தின் உடல் தே.மு.தி.க கட்சி அலுவலகத்திலிருந்து அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு வந்துபோது அளித்த பேட்டியில், "அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது வருந்தினேன். எனக்கு சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று கூறினார்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, "கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் நாமம் வாழ்க" என்று பேசினார். 
 

Leave a Reply