• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேண்டாம் முத்தம் - பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை 

சினிமா

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் கட்டியணைத்துக்கொள்ளவோ, முத்தமிட்டுக்கொள்ளவோ வேண்டாம் என பிரித்தானியர்களை மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பண்டிகைக்காலங்களில் நண்பர்களையும், உறவினர்களையும் கட்டியணைத்துக்கொள்வது சகஜமான ஒரு விடயம். ஆனால், இந்த பாழாய்ப்போன நூறு நாள் இருமல் அதற்கு பெரும் தொந்தரவாக அமைந்துவிட்டது.

பிரித்தானியாவில் pertussis மற்றும் whooping cough என்று அழைக்கப்படும் இந்த நூறு நாள் இருமல் பரவி வரும் நிலையில், மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார் வைரஸ் துறை நிபுணரான பேராசிரியர் Richard Tedder.  

கிறிஸ்துமஸ் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் மக்கள் மற்றவர்களை சந்திக்கும் நிலையில், இந்த நூறு நாள் இருமல் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறியுள்ள அவர், மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறும், இருமல் பரவுவதைத் தவிர்க்க, மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில், ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்வதற்கும், முத்தமிடுவதற்கும், ’NO’ சொல்லும் விதியைப் பின்பற்றுமாறும், கோவிட் காலகட்டத்தில் செய்தது போல, முழங்கைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை வாழ்த்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். 
 

Leave a Reply